KA Sengottaiyan / AK Selvaraj (Photo Credit : Youtube / @AiadmkVishnu X)

செப்டம்பர் 06, திண்டுக்கல் (Dindigul News): ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதியான நேற்று முன்னாள் அமைச்சரும், அதிமுக கட்சியில் ஈரோடு மாவட்டத்தை கையில் வைத்துள்ள முக்கிய மாவட்ட செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் பிரிந்த அதிமுக நிர்வாகிகளை மீண்டும் அதிமுகவில் இணைத்து கட்சியை 2026 தேர்தலுக்கு எடப்பாடி பழனிச்சாமி வழியில் நடத்த முன்வர வேண்டும். இந்த விஷயத்தை பத்து நாட்களுக்குள் செய்ய வேண்டும் என்று கெடு விதித்திருந்தார். தமிழக அரசியலில் இந்த விஷயம் மிகப்பெரிய அளவில் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது.

செங்கோட்டையன் கட்சி பதவி பறிப்பு :

மேலும் செங்கோட்டையனின் கோரிக்கை படி அதிமுகவிலிருந்து விலகிய டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக அணி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி ஆகியவற்றை இணைக்க செங்கோட்டையன் விருப்பம் தெரிவித்து கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி வெளிப்படையாக பொதுவெளியில் தகவலை தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அவருக்கு ஆதரவாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிற மாவட்ட செயலாளர்களும், பவானிசாகர் தொகுதி எம்எல்ஏ பண்ணாரி உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று காலை திண்டுக்கல்லில் அதிமுக மூத்த தலைவர்கள் கே.பி முனுசாமி, தங்கமணி, கே.பி அன்பழகன், எஸ்.பி. வேலுமணி உட்பட பலரிடமும் எடப்பாடி பழனிச்சாமி நேரடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். Airport Moorthy: ஏர்போர்ட் மூர்த்திக்கு செருப்படி.. விசிக தொண்டர்கள் ஆவேசம்.. சட்டையை கிழித்து பாய்ந்து-பாய்ந்து தாக்குதல்.! 

புதிய பொறுப்பாளர் நியமனம் :

அதன்படி கழக விதிகளுக்கு எதிராக செயல்பட்டதாக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனை கட்சி பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். இதனால் அவருக்கு ஆதரவாக இருந்த பல்வேறு நிர்வாகிகளின் பொறுப்புகளும் பறிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அதிமுக பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனுக்கு செக் வைத்துள்ளதாகவும், தனது முடிவில் அவர் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுகவின் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக ஏ.கே.செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். செங்கோட்டையனின் கட்சி பதவி பறிக்கப்பட்ட 2 மணிநேரத்தில் புதிய பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி அதிகாரபூர்வ அறிவிப்பு :