செப்டம்பர் 07, சென்னை (Chennai News): ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செப்டம்பர் ஐந்தாம் தேதி செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கட்சியிலிருந்து விலகிய மூத்த நிர்வாகிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும்., 2026 சட்டப்பேரவை தேர்தலில் பிளவுபட்ட அதிமுக ஒன்று சேர்ந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். எடப்பாடி பழனிச்சாமிடம் இது குறித்து ஆறு முன்னாள் அமைச்சர்கள் சந்தித்து வலியுறுத்தவும் செய்திருந்தோம். அவர் 10 நாட்களுக்குள் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து செய்தியாளர்களை சந்தித்து இருந்தார். அக்கட்சியின் விதியை மீறி பொதுவெளியில் செய்தியாளர்களை சந்தித்து கட்சி விஷயம் குறித்து கூறியதால், செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? விளக்கம் கேட்கப்படுமா? என கேள்வி எழுந்து இருந்தது. Airport Moorthy: ஏர்போர்ட் மூர்த்திக்கு செருப்படி.. விசிக தொண்டர்கள் ஆவேசம்.. சட்டையை கிழித்து பாய்ந்து-பாய்ந்து தாக்குதல்.!
ஈரோடு அதிமுகவில் குழப்பம்:
இந்த விஷயம் அதிமுகவுக்குள் மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கிய நிலையில், மறுநாள் திண்டுக்கல்லில் 'மக்களை காப்போம்' பிரச்சாரத்திற்கு முன்னதாக கட்சி விஷயம் தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, கே.பி. முனுசாமி உட்பட பலரிடம் நேரடி ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 7 பேரின் கட்சிப்பதவியை அதிரடியாக பறித்து உத்தரவிட்டார். கட்சி பதவி பறிக்கப்பட்டு அவர்கள் அடிப்படை தொண்டர்களாக அறிவிக்கப்பட்டனர். மேலும், கே.ஏ. செங்கோட்டையன் வசம் இருந்த ஈரோடு மாவட்ட செயலாளர் பொறுப்பு மேட்டுப்பாளையம் சட்டப்பேரவை தொகுதியின் எம்எல்ஏவுக்கு செல்வராஜுக்கு கூடுதலாக வழங்கப்பட்டது. Breaking: கே.ஏ. செங்கோட்டையன் பதவி பறிப்பு.. 2 மணிநேரத்தில் புதிய பொறுப்பாளர் நியமனம்.. அதிமுக தலைமை அதிரடி.!
முன்னாள் எம்.பி. கட்சிப் பதவி பறிப்பு:
இந்நிலையில், செங்கோட்டையனின் ஆதரவாளரான முன்னாள் எம்.பி சத்யபாமாவின் கட்சிப் பதவி பறிக்கப்படுவதாக அக்கட்சியின் தலைமை உத்தரவிட்டுள்ளது. அடுத்தடுத்த அறிவிப்புகள் அதிமுகவை ஒன்றிணைக்கும் வகையில் இல்லாத நிலையில், அதிமுக பிளவுபடுமா? அல்லது இவர்கள் கட்சி தலைமைக்கு விளக்கம் அளித்து மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவார்களா? 2026 தேர்தலில் இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. கட்சி பொறுப்பு பறித்த நிர்வாகிகளிடம் டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம் உட்பட பலரும் தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் சொல்லப்படுகிறது. இவர்கள் வேறு கட்சியில் இணைய வாய்ப்புகள் உள்ளதா? எனவும் கேள்வி எழுந்துள்ளது.
சத்யபாமா கட்சிப் பதவி பறிப்பு:
தலைமைக் கழக அறிவிப்பு pic.twitter.com/Da3FB0tSRf
— AIADMK - -SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) September 7, 2025