KA Sengottaiyan (Photo Credit: @TwitzKarthi X)

அக்டோபர் 31, சென்னை (Chennai News): கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக கட்சியில் ஈரோடு மாவட்டத்தை கையில் வைத்துள்ள முக்கிய மாவட்ட செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் பிரிந்த அதிமுக நிர்வாகிகளை மீண்டும் அதிமுகவில் இணைத்து கட்சியை 2026 தேர்தலுக்கு எடப்பாடி பழனிச்சாமி வழியில் நடத்த முன் வர வேண்டும். இந்த விஷயத்தை பத்து நாட்களுக்குள் செய்ய வேண்டும் என்று கெடு விதித்திருந்தார். தமிழக அரசியலில் இந்த விஷயம் மிகப்பெரிய அளவில் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது. JustIN: தமிழகத்தில் சோகம்.. கடல் அலையில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு.. அடுத்தடுத்து கரை ஒதுங்கிய சடலங்கள்.!

கே.ஏ. செங்கோட்டையன் கட்சி பதவியில் இருந்து நீக்கம்:

இதனால் கழக விதிகளுக்கு எதிராக செயல்பட்டதாக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனை கட்சி பதவியில் இருந்து நீக்கி இ.பி.எஸ் உதவிட்டார். பசும்பொன்னில் நேற்று ஓபிஎஸ், சசிகலா, டிடிவி ஆகியோரை அவர் சந்தித்த நிலையில், அதிமுகவில் இருந்து கே.ஏ. செங்கோட்டையனை (KA Sengottaiyan) நீக்கி கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கே.ஏ. செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் ஏற்படுத்தும் விதமாக தொடர்ந்து செயல்பட்டதால் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக தொண்டர்கள் இனி அவருடன் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்:

இது குறித்து அதிமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும், அவர்களுடன் ஒன்றிணைந்து, கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற காரணத்தினாலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த திரு. K.A. செங்கோட்டையன், M.L.A.,(கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 77 வயதான கே.ஏ. செங்கோட்டையன் 50 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவில் இருந்த நிலையில், கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிமுக தலைமை உத்தரவு:

href="https://twitter.com/SRajaJourno/status/1984228446940360944?ref_src=twsrc%5Etfw">October 31, 2025