Zeeshan Siddiqui: தந்தை இறந்ததும் கட்சி தாவிய மகன்; மகாராஷ்டிரா அரசியலில் அதிரடி திருப்பம்.!

அஜித் பவார் முன்னிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பாபா சித்திக்கின் மகன் இணைந்து, பாந்திரா கிழக்கு தொகுதியின் வேட்பாளராக மீண்டும் களமிறங்கி இருக்கிறார்.

Zeeshan Siddique Joins Ajit Pawar's NCP (Photo Credit: @ANI X)

அக்டோபர் 25, பாந்த்ரா (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவராகவும், சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றி வந்த பாபா சித்திக், அவரது மகன் ஜீஷான் சித்திக்கின் (Zeeshan Siddiqui Joins NCP) கட்சி அலுவலகம் முன்பு 3 பேர் கும்பலால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த விஷயம் மகாராஷ்டிரா (Maharshtra Politics) மாநில அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. அவருக்கு ஏற்கனவே கொலை மிரட்டல் இருப்பதாகவும் தெரியவந்த நிலையில், லாரன்ஸ் பீஷ்னோய் குழுவால் கொலை சம்பவம் அரங்கேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. BRICS Summit 2024: ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு.. சீன அதிபரை 5 ஆண்டுகள் இடைவேளைக்கு பின் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி.! 

மீண்டும் சட்டப்பேரவை வேட்பாளர்:

இதனிடையே, அவரின் மகன் ஜீஷன் சித்திக் அஜித் பவார் (Ajit Pawar) தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இதன் வாயிலாக அவர் மீண்டும் பாந்த்ரா கிழக்கு தொகுதியில் சட்டப்பேரவை வேட்பாளராக களமிறக்கப்படவுள்ளார். மராட்டிய மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, பாஜக, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலை எதிர்கொள்கின்றன.

பாஜக கூட்டணியில் இணைந்தார்;

ஜீஷான் சித்திக் தனது தந்தை சரத் பவரின் தேசியவாத காங்கிரசில் இணைந்தாலும், அவர் காங்கிரஸிலேயே பதவியில் தொடர்ந்து வந்தார். தந்தையின் மரணத்திற்கு பின்னர் அவர் சரத் பவரின் கட்சியிலேயே இணையலாம் அல்லது காங்கிரஸிலேயே தொடரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பாஜக கூட்டணியில் ஐக்கியமாகி இருக்கிறார். மராட்டிய மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கும், நவம்பர் 20 அன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. நவ. 23 அன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

சித்திக் அஜித் பவார் முன்னிலையில் என்.சி.பி-யில் இணைந்த காட்சிகள்: