Lok Sabha Election Results 2024: பிரதமர் நரேந்திர மோடி 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை..!

31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருவது, அவரின் வெற்றிக்கான வாய்ப்பை உறுதி செய்கிறது.

PM Narendra Modi (Photo Credit: @NarendraModi X)

ஜூன் 04, வாரணாசி (Varanasi News): 2024 இந்தியா தேர்தல்கள் முடிவுகள் இன்று வெளியாகிறது. உலகமே உற்றுநோக்கி வரும் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து, தேர்தலில் களம்கண்ட 8,320 வேட்பாளர்களும் காத்திருக்கின்றனர். 14 சுற்றுகளாக எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். இன்று இந்தியா முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் முன்னிலை: இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் 6 ஆயிரம் வாக்குகள் பின்தங்கி முதல் சுற்றில் கட்சியினருக்கு அதிர்ச்சி அளித்தார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை விட 6,223 வாக்குகள் பின்தங்கி இருந்த நிலையில், தற்போது அவர் தொடர்ந்து முன்னிலை வருகிறார். 10:40 மணி நிலவரப்படி பிரதமர் நரேந்திர மோடி 1,06,247 வாக்குகள் பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 74,000 ற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளார். இருவருக்கும் 31,744 வாக்குகள் வித்தியாசம் இருக்கின்றன. Lok Shaba Election Results 2024: இந்தியா தேர்தல்கள் 2024: தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி தர்மபுரி தொகுதியில் தொடர்ந்து முன்னிலை.! 

ராகுல் முன்னிலை: இதனால் அடுத்தடுத்த சுற்றுகள் முடிவை எதிர்பார்த்து அக்கட்சியினர் காத்திருக்கின்றனர். அதேபோல, ராகுல் காந்தி தான் போட்டியிட்ட வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறார். காலை 10:30 மணி நிலவரப்படி பாஜக 291 தொகுதியிலும், காங்கிரஸ் 223 தொகுதியிலும் மற்றவை 28 தொகுதியிலும் முன்னிலையில் இருக்கிறது.