PM Modi on Election Results: "பாஜகவை மக்கள் விரும்புகிறார்கள்" - 3 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து மனம்திறந்த பிரதமர் நரேந்திர மோடி.!
அதனை உறுதி செய்யும்பொருட்டு 5 மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
டிசம்பர் 04, புதுடெல்லி (Narnedra Modi): ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற முடிந்த தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கையானது, டிசம்பர் மூன்றாம் தேதியான நேற்று வெளியானது. மிசோராமில் மட்டும் இன்று தேர்தல் முடிவுகள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு, தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி: தேர்தல் முடிவுகளின்படி, காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற வந்த ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக தனது ஆட்சியை நிலைநாட்டியுள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜக தனது ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் ஆட்சியானது அகற்றப்பட்டு, காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது.
மிசோராமில் இன்று தேர்தல் முடிவுகள்: இன்று மிசோரம் மாநிலத்தின் தேர்தல் முடிவுகளும் வெளியாகும் என்பதால், அங்கு யார் ஆட்சியை பிடிப்பார்கள் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கருத்து கணிப்பின்படி, தொங்கு சட்டசபை அமையலாம் என எதிர்பார்க்கபடுகிறது. மாநில கட்சிகளுக்கு இடையே அங்கு பலத்த போட்டி நிலவி வருகிறது. T20I IND Vs AUS Final: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியில், போராடி தோற்ற ஆஸ்திரேலியா..!
மக்களுக்கு நன்றி: இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் தேர்வு தேர்தல் முடிவுகள் இந்திய மக்கள் பாரதிய ஜனதா கட்சியின் நல்லாட்சி மற்றும் வளர்ச்சி அரசியல் போன்றவற்றில் ஈடுபாடு இருப்பதை உறுதி செய்கின்றனர்.
வளர்ச்சிக்காக உழைப்போம்: மக்களின் ஆதரவுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் நலவாழ்வுக்காக அயராது நாங்கள் உழைப்போம். தேர்தல் வெற்றிக்காக உழைத்த ஒவ்வொருவருக்கும் நன்றி' என தெரிவித்துள்ளார். அதேபோல, டெல்லியில் பாஜக தொண்டர்களிடையே கிட்டத்தட்ட பிரதமர் 40 நிமிடங்கள் உரையாற்றவும் செய்துள்ளார்.