டிசம்பர் 04, பெங்களூர் (Bangalore): ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில், இந்தியா - ஆஸ்திரேலியா (India vs Australia T20i 2023) அணிகள் மோதிக்கொண்ட நிலையில், 5 போட்டிகளில் நான்கு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா ஒரு போட்டியில் வெற்றி அடைந்தது. நேற்று, நடப்பு டி20 தொடரின் இறுதிப் போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
ரன்களை குவித்த இந்தியா: போட்டியின் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பவுலிங் தேர்வு செய்தது. இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் சார்பில் விளையாடிய வீரர்களின் ஜெய்ஸ்வால் 15 பந்துகளில் 21 ரன்னும், ஷ்ரேயஸ் ஐயர் 37 பந்துகளில் 53 ரன்னும், ஜிதேஷ் சர்மா 16 பந்துகளில் 24 ரன்னும், அக்ஸர் 21 பந்துகளில் 31 ரன்னும் அடித்து அசத்தினர்.
161 ரன்களே இலக்கு: 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 160 ரன்கள் எடுத்திருந்தது. 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க ஆஸ்திரேலியா அணி, திறம்பட விளையாடிய போதிலும் இறுதியில் தோல்வியை தழுவியது. Cyclone Michaung Live Tracker Map on Windy: மிக்ஜாங் புயல் எங்கு நகருகிறது?.. நேரலையில் எப்படி?.. துல்லியமான தகவலை தெரிந்துகொள்ளுங்கள்.!
போராடி தோற்ற ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய அணியின் சார்பில் விளையாடியவர்களில், டார்விஸ் 18 பந்துகளில் 28 ரன்னும், பென் 36 பந்துகளில் 54 ரன்னும், டேவிட் 17 பந்துகளில் 17 ரன்னும், மேத்யூ 15 பந்துகளில் 22 ரன்னும் எடுத்திருந்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 154 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி அடைந்தது.
5ல் 4 வெற்றி: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இறுதி ஆட்டத்தில் இந்தியா தனது முதல் தோல்வியை அடைந்து ஆஸ்திரேலியா உலக கோப்பை 2023-ஐ தட்டிச் சென்றது. இந்த நிலையில், தற்போது இந்திய அணி டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணியை பதற வைத்துள்ளது. 5 போட்டிகளில் நான்கு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று இருக்கிறது.
ஆட்ட நாயகன், தொடர் நாயகனாக இந்திய வீரர்கள்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தின் நாயகனாக, இந்திய அணியை சேர்ந்த ரவி பீஷ்னாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல, நேற்று நடைபெற்ற ஆட்டத்தின் நாயகனாக அக்சர் படேல் தேர்வு செய்யப்பட்டார். இந்திய அணியை சூரியகுமார் யாதவ் வழிநடத்தினார்.