Heeraben Modi: பிரதமர் மோடியின் தாயார் 100 வயதில் காலமானார்; சோகத்தில் பாஜகவினர், மாநில முதல்வர்கள் இரங்கல்..!
அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டு இருந்த பிரதமர் மோடியின் தாயார் வயது மூப்பால் காலமானார்.
டிசம்பர் 30, காந்திநகர்: இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் (Heeraben Modi Passed Away) தனது 100 வயதில் காலமானார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள காந்திநகர் (Gandhi Nagar, Gujarat) அருகேயுள்ள கிராமத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) தாயார் ஹீராபென் தனது இளையமகன் பங்கஜ் மோடியுடன் வசித்து வருகிறார். கடந்த ஜூன் மாதத்தில் ஹீரப்பெண்ணுக்கு 100ம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்ட ஹீராபென், சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். இந்த தகவலை பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். Tunisha Sharma: நடிகை துனிஷா மர்ம மரணம் விவகாரம்; ஐபோனை அன்லாக் செய்த அதிகாரிகள்.. வெளிவரும் பகீர் உண்மைகள்?..!
அவரின் ட்விட்டர் பதிவில், "நூற்றாண்டின் கடவுள் காலடியில் தங்கியுள்ளது. துறவியின் பயணம், தன்னலமற்ற கர்மயோகியுடைய அடையாளம், மதிப்புகளுக்கு அர்ப்பணிப்பு செய்யப்பட்ட வாழ்க்கை கொண்ட மும்மூர்த்திகளையும் நான் உணர்ந்து இருக்கிறேன். அவரின் 100வது பிறந்தநாளில் அன்னையை சந்திக்கையில் புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையாக வாழுங்கள் என்று கூறினார். அவர் கூறியது என்றும் என் நினைவுக்கு வரும்" என்று உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
இன்று பிரதமர் மேற்கு வங்கத்தில் நடைபெறும் வந்தே பாரத் இரயில் தொடக்க விழாவில் நேரடியாக கலந்துகொள்ளவிருந்த நிலையில், அவர் அதற்காக அகமதாபாத்தில் இருந்து நேற்று புறப்பட்டு சென்றார். இதனால் அவரின் பயணத்தில் மாற்றம் இருக்குமா? காணொளி வாயிலாக பொதுநிகழ்ச்சிகளில் பிரதமர் கலந்துகொள்கிறாரா? என்ற தகவல்கள் காத்திருக்கின்றன.
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் உட்பட பலரும் தங்களின் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.