PM Modi Puja at Guruvayur Temple: குருவாயூர் கோவிலில் தலைவணங்கி சாமி தரிசனம்: பிரதமர் நரேந்திர மோடி கேரள பயணத்தில் நெகிழ்ச்சி..!

ரூ.4000 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை கேரளாவில் தொடங்கி வைக்கும் பிரதமர் நரேந்திர மோடி, கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

PM Narendra Modi at Guruvayur Temple (Photo Credit: @ANI X)

ஜனவரி 17, குருவாயூர் (Kerala News): பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) நேற்று ஆந்திர மாநிலத்திற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டு நலத்திட்ட பணிகளை தொடங்கிவைத்ததையடுத்து, மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை உறுப்பினர்களை நேரில் சந்தித்து மாநிலத்தின் வளர்ச்சி தொடர்பாக ஆலோசனை நடத்தி இருந்தார். அங்குள்ள வீரபத்திரசாமி கோவிலில் தரிசனம் செய்து ராம மந்திரத்தை பாடி ஆசிபெற்றார். அதனைத்தொடர்ந்து, நேற்று கேரளாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார்.

ரூ.4000 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகள் தொடக்கம்: திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் நேரில் வந்து வரவேற்பு அளித்தனர். இந்நிலையில், இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி குருவாயூர் (Guruvayur Temple) கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதற்கு பின் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் அரசு நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்கிறார். ரூ.4000 கோடி மதிப்பிலான பணிகளை இன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார். Narrowly Escape From Death: அலட்சியமாக இரயில்வே தண்டவாளத்தை கடந்த நபர்; நூலிழையில் உயிர்தப்பிய பதைபதைப்பு காட்சிகள் உள்ளே.! 

எதிர்வரும் தேர்தலுக்கான செயல்பாடுகள் தீவிரம்: 2024 பாராளுமன்ற தேர்தலுக்காக ஆளும் பாஜக தன்னை தொடர்ந்து தயார்படுத்தி வரும் நிலையில், பல மாநிலங்களில் அடுத்தடுத்து தனது செயல்பாடுகளை தீவிரப்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டிலும் பாஜக தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மண் மக்கள்' யாத்திரை பயணம் வாயிலாக மக்களை நேரில் சந்தித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.