HC On Terminating Women Officer On Ground Of Marriage: திருமணத்தை காரணம்காட்டி பெண் பணிநீக்கம் செய்யப்பட்டது தவறானது - ரூ.60 இலட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், அரசு இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

Supreme Court of India (Photo Credit: httpsindiaai.gov.in)

பிப்ரவரி 20, டெல்லி (Delhi): டெல்லியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் பெண்மணி ஒருவர் செவிலியராக வேலைபார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், அதனைத்தொடர்ந்து எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பணிநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். பணிநீக்கம் தொடர்பான காரணம் குறித்து விசாரித்தபோது, அவர் திருமணம் செய்ததால் பணிநீக்கம் செய்தோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள் கண்டனம்: இதனை எதிர்த்து மாநில உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தும் பலன் இல்லை. இதனையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவே, மனு மீதான விசாரணை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபங்கர் தத்தா தலைமையில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை நிறைவுபெற்று இன்று தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அப்போது, பெண் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இது அரசியலமைப்புக்கு எதிரானது என்ற தகவலையும் பதிவு செய்தனர். Putin Gifts Car to Kim Jong Un: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு, விலையுயர்ந்த சொந்த நாட்டு தயாரிப்பு காரை பரிசாக வழங்கிய ரஷிய அதிபர்.! 

நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், "பாலின பாகுபாடு மற்றும் சமத்துவமின்மை கொண்ட வழக்காக இவ்வழக்கு அமைந்து இருக்கிறது. திருமணத்தால் பெண் அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது, அரசியல் அமைப்பின் விதிகளுக்கு முரணானது. இவ்வாறான ஆணாதிக்க நடவடிக்கை மனித கண்ணியம், பாகுபாடு இல்லாத உரிமை, நியாயமான நடவடிக்கை ஆகியவற்றை கேள்விக்குறியாக்குகிறது. பாலின அடிப்படையில் இருக்கும் சட்டமும், ஒழுங்குமுறையும் அரசியலமைப்பால் ஏற்றுக்கொள்ளாதவை ஆகும்.

இழப்பீடு வழங்க உத்தரவு: பெண் பணியாளர்களின் திருமணம் காரணமாக அவர்களின் பணிநீக்க நடவடிக்கை சரியானது இல்லை. இராணுவ செவிலியர் சேவையில் உள்ள சேவை விதிகளின்படி பணிக்கு தகுதி இல்லாத நபர்கள் என்று வரையறையில் உள்ள சரத்துகளில் திருமணம் போன்ற விஷயங்கள் திரும்ப பெறப்பட்டு இருக்கின்றன. அதனை நீதிமன்றம் தெளிவுபடுத்துகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.60 இலட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். எட்டுவாரத்திற்குள் இழப்பீடு வழங்கப்படாத பட்சத்தில், 12% வட்டியுடன் தொகை வரவு வைக்கப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளனர்.



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif