Police Constable Died: வெப்பத்தில் மயங்கி விழுந்த தலைமை காவலரை வீடியோ எடுத்த இன்ஸ்பெக்டர்; கேள்வி எழுப்பிய பொதுமக்கள்..! வீடியோ வைரல்..!
கான்பூரில் அதிக வெப்பத்தால் மயங்கி விழுந்த தலைமை காவலரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், அவரை வீடியோ எடுத்த சப்-இன்ஸ்பெக்டரை மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஜூன் 20, கான்பூர் (Uttar Pradesh News): உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் அதிர்ச்சி தரும் வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. கான்ஸ்டபிள் (Police Constable) ஒருவர் அதிக வெப்பத்தால் இறந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவர் இறப்பதற்கு முன் அந்த வீடியோவில், கான்ஸ்டபிள் மயக்கத்தில் இருக்கிறார், உடன் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் (Sub-Inspector) அவரை செல்போனில் பதிவு செய்கிறார். இதன் பின்னர், மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் தாமதமானதால் கான்ஸ்டபிள் உயிரிழந்தார். ENG Vs WI Highlights: இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி; முதல் தோல்வியை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ்..!
கான்பூரை சேர்ந்த தலைமை காவலர் பிரிஜ் கிஷோர் சிங், பணி முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, அதிக வெப்பத்தால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டு ரயில் நிலையத்திற்கு வெளியே கீழே விழுந்தார். அப்போது, அவர் மயக்கத்தில் இருப்பதைப் பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் உதவுவதற்குப் பதிலாக தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். பின்னர், சற்று நேரம் கழித்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
மயக்கமடைந்த தலைமைக் காவலரின் வீடியோவை சப்-இன்ஸ்பெக்டர் பதிவு செய்தபோது, அவரை வேறொருவர் வீடியோ எடுத்துள்ளார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், அவரை மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லாமல் செல்போனில் வீடியோ எடுத்த சப்-இன்ஸ்பெக்டரை பொதுமக்கள் கடுமையாக சாடியுள்ளனர்.