Teenager Was Beaten To Death: நிலத்தகராறில் வாலிபரை அடித்துக் கொன்ற உறவினர்கள்..!

தெலங்கானாவில் உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட நிலத்தகராறில் வாலிபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Murder (Photo Credit: Pixabay)

ஜூன் 15, நாராயணன்பேட்டை (Telangana News): தெலங்கானா மாநிலம், நாராயணன்பேட்டை மாவட்டத்தில் உள்ள சின்னபோர்லா கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சு (வயது 28). இவரது தாத்தாவிற்கு 2 மனைவிகள் இருந்துள்ளனர். அந்த இரண்டு மனைவிகளின் வாரிசுகளுக்கும் இடையே, பல ஆண்டுகளாக நில உரிமை (Land Dispute) தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. Minor Girl Pregnant: இன்ஸ்டாகிராம் பழக்கம்; சிறுவனால் கர்ப்பமான 15 வயது சிறுமி..!

இந்நிலையில், நேற்றைய தினமும் இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில், பயங்கர மோதல் ஏற்பட்டு, வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒருவரை ஒருவரி மாறிமாறி கட்டையால் தாக்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து, தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் படுகாயமடைந்த சஞ்சுவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இதில் படுகாயமடைந்த சிலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement