Woman Arrested In Money Fraud Case: லோன் வாங்கி தருவதாக பண மோசடி செய்த தம்பதி; தலைமறைவாகியுள்ள கணவருக்கு காவல்துறையினர் வலைவீச்சு..!
ஏப்ரல் 13, புதுச்சேரி (Puducherry News): புதுச்சேரியில் உள்ள முதலியார்பேட்டை திருவிக நகரில் வசித்து வரும் தம்பதி கருநேந்திரன்-ரஞ்சனி. இதில், ரஞ்சனிக்கு குழு லோன் (Group Loan) ரூ. 1.70 லட்சம் வாங்கி தருவதாக, பாரதிதாசன் நகரை சேர்ந்த சத்யா, செந்தில்குமார் ஆகிய இருவரும் 22 பவுன் தங்க நகை, 1.45 லட்சம் ரூபாய் பணம், இரு சக்கர வாகனம், 2 செல்போன் போன்றவற்றை ரஞ்சனியிடன் இருந்து வாங்கியுள்ளனர். இவை அனைத்தையும் வாங்கிக்கொண்டு குழு லோன் வாங்கி தராமல் ஏமாற்றி விட்டனர். பணம், பொருட்கள் என ஒட்டுமொத்தமாக 15 லட்சம் ரூபாய் மதிப்பு இதில் அடங்கும். Fishing Prohibition Period: மீன்பிடி தடைக்காலம் அமல்; ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் தொடக்கம்..!
இதுதொடர்பாக ரஞ்சனி, முதலியார்பேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின்பேரில், சம்மந்தப்பட்ட சத்யா, செந்தில்குமார் ஆகியோர் மீது மோசடி வழக்கு உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, நேற்று முன்தினம் இரவு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், அலாவுதீன் தலைமையில் காவல்துறையினர் சத்யா வீட்டிற்கு சென்று, தப்பிக்க முயன்ற அவரை மடக்கி பிடித்தனர்.
பின்னர், காவல்நிலையத்தில் சத்யாவிடம் விசாரணை நடத்தியதில், அவர் தான் பணம் பொருட்களை வாங்கிக் கொண்டு மோசடி செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், தனது கணவருடைய வருமானம் குறைவாக உள்ளதால், இவ்வாறு லோன் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றினோம் என்று அவர் கூறியுள்ளார். இதனையடுத்து, சத்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர், தலைமறைவாகியுள்ள அவரது கணவர் செந்தில்குமாரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.