Amith Shah About Opposition Meeting: 2024-ளிலும் பிரதமர் மோடி தான்; பாட்னா போட்டோசூட்? - எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்து கலாய்த்த உள்துறை அமைச்சர் அமித் ஷா.!
பிரதமர் மோடி மற்றும் நமது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விடுக்கப்படும் சவாலை முறியடித்து பிரதமர் மோடி அரியணை ஏறுவார் என அமித் ஷா சூளுரைத்தார்.
ஜூன் 23, ஜம்மு காஷ்மீர் (Jammu Kashmir): பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா நகரில், தேசிய அள.வில் 15-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தியின் தலைமையில் இக்கூட்டம் நடந்து வருகிறது.
இந்த கூட்டத்தில் டெல்லி மற்றும் இராஜஸ்தான் மாநில முதல்வர்கள் மற்றும் ஆம் ஆத்மீ கட்சி நிர்வாகிகளான அரவிந்த் கெஜ்ரிவால், பகவத் மான், தமிழ்நாடு முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின், ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவருமான ஹேமந்த் சோரன், Autograph from PM Modi: இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் போட்டிபோட்டு ஆட்டோகிராப் வாங்கி செல்பி எடுத்த அமெரிக்க காங்கிரசர்கள்.. இந்தியர்களுக்கே பெருமிதம்.!
மேற்குவங்க முதல்வர் & திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மமதா பானர்ஜி, மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) தலைவர் சரத் பவார் உட்பட பல அரசியல் கட்சி தலைவர்களும் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தின் மூலமாக 2024 தேர்தலில் வலுவான எதிர்க்கட்சியை கட்டமைத்து, அதன் செயல்பாடுகளை துரிதப்படுத்தி ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அதேபோல, காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூடுவதால், மூன்றாவது அணி உருவாகும் வாய்ப்பும் இனி கேள்விக்குறியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து அனைவரும் கலந்தாலோசிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Sundar Pichai Muhesh Ambani: வெள்ளை மாளிகை விருந்தில் நேரில் சந்தித்த சுந்தர் பிச்சை – முகேஷ் அம்பானி…!
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "இன்று பாட்னாவில் போட்டோசூட் நடக்கிறது. எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடி மற்றும் நமது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சவால் விடுக்க விரும்புகிறார்கள். 2024ல் பிரதமர் மோடி 300-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றியடைந்து பிரதமராக பொறுப்பேற்பார் என்பதை நான் அவர்களுக்கு (எதிர்க்கட்சிகளுக்கு) சொல்ல விரும்புகிறேன்" என கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.