Amit Shah On CAA: குடியுரிமை திருத்தச்சட்டம் திரும்பப்பெற வாய்ப்பில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு.!

இந்திய இறையாண்மையை பாதுகாக்க குடியுரிமை திருத்தச்சட்டம் என்பது எப்போதும் திரும்ப பெறப்படாது என மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.

Amit Shah | CAA Act (Photo Credit: @AmitShah / OTVNews X)

மார்ச் 14, புதுடெல்லி (New Delhi): கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் வெற்றியடைந்து, இரண்டாவது முறையாக ஆட்சியை அமைத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு, 2019ல் குடியுரிமை சட்டதிருத்தத்தை (Citizen Amendment Act CAA) அமல்படுத்தி நிறைவேற்றியது. அதனைத்தொடர்ந்து, கடந்த மார்ச் 11, 2024 அன்று இச்சட்டம் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டது. Car Rammed into Shops: சாலையோர கடை மீது பாய்ந்த கார்; குடிகார ஓட்டுனரால் சோகம்.. 22 வயது இளம்பெண் பலி., 6 பேர் படுகாயம்.! 

சிஏஏ சட்டம்: குடியுரிமை சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் தங்களின் கருத்தை முன்வைத்து கடுமையான எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன. இந்த சட்டத்தின் வாயிலாக பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியான துன்புறுத்தலை சந்தித்து, அங்கு வாழ வழியின்றி கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன் வரை இந்தியாவிற்கு வருகைதந்த இந்துக்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், ஜெயின் மற்றும் பவுத்த சமூகத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்க சட்டம் வழிவகை செய்கிறது. பிற மதத்தினருக்கு இதன் வாயிலாக இந்திய குடியுரிமை கிடைக்காது. CAA Rules PDF Download: இந்தியாவில் அமலானது சிஏஏ சட்டம்; முழு விபரத்தை தெரிந்துகொள்வது எப்படி?.. விபரம் இதோ.! 

அமித் ஷா (Amit Shah) உறுதி: இந்நிலையில், ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பிரத்தியேக பேட்டி வழங்கிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "சிஏஏ சட்டம் திரும்ப பெறப்படாது. நமது நாட்டில் இந்திய குடியுரிமையை உறுதி செய்வது, இறையாண்மை உரிமை ஆகும். இதில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள இயலாது" என தெரிவித்தார். மேலும், மேற்கு வங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி சிஏஏ குறித்து பேசியது குறித்து கேட்கையில், "பாஜக மேற்குவங்கத்தில் ஆட்சிக்கு வந்து, ஊடுருவலை தடுக்கும் நாள் தொலைவில் இல்லை. இவ்வாறான அரசியல் செய்வது தேச பாதுகாப்புக்கு முக்கியமானது. மம்தாவுக்கு தஞ்சம் புகுந்துகொள்ளும் நபருக்கும், ஊடுருவும் நபருக்கும் வித்தியாசம் என்பது தெரியாது.