Fake Ultra Tech Cement Bags: அல்டரா டெக் நிறுவனத்தின் பெயரில் போலி சிமெண்ட் மூடை விநியோகம்: குடோன் அமைத்து சர்ச்சை செயல்... 1000 மூடைகள் பறிமுதல்..!
2 குடோன்கள் அமைத்து மாவட்ட அளவில் போலியான சிமெண்ட் விநியோகம் செய்த சம்பவம் அமபலமாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
ஜனவரி 17, அமோரா (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அலகாபாத் மாவட்டம், அமோரா தீதோலி பகுதியில் அல்ட்ராடெக் நிறுவனத்தின் சிமெண்டை வாங்கிய பலரும் அதன் தரம் குறைந்து உள்ளது எனத் தொடர் குற்றச்சாட்டை முன் வைத்தனர். இதனையடுத்து, சம்பந்தப்பட்ட அல்ட்ராடெக் நிறுவனத்தின் மேலாளர் அங்குள்ள பகுதிகளில் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தார்.
கலப்படமான சிமெண்ட் மூடைகள் விநியோகம்: அப்போது அல்ட்ராடெக் நிறுவனத்தின் சிமெண்ட் மூட்டைகளை பிரித்து, அதில் உள்ள சிமெண்டை சேகரித்து, போலியான சிமெண்ட் (Ultra Tech) போன்ற நிறம் உள்ள கலவையை வைத்து சிமெண்ட் மூட்டைகளை நிரப்பி சிமெண்ட் விநியோகம் செய்தது தெரியவந்தது. இந்த செயலை அரங்கேற்றுவதற்கு இரண்டுக்கும் மேற்பட்ட தற்காலிக குடோன் போன்ற அமைப்புகள் நிறுவப்பட்டு, அங்கிருந்து இந்த சர்ச்சை செயல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. Tamil Fisherman Arrest: ராமநாதபுரம் மீனவர்கள் 18 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை: சிறையில் அடைப்பு.!
2 குடோன்களுக்கு சீல், 1000 மூடைகள் பறிமுதல்: இதனையடுத்து, அல்ட்ராடெக் நிறுவனத்தின் மேலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்து, அதிகாரிகள் உதவியுடன் அதிரடி சோதனை நடத்தி இரண்டு குடோன்களையும் மூடி சீல் வைத்தார். அங்கு பணியாளர் ஒருவர் சிமெண்டை நிரப்பும் அதிர்ச்சி காணொளியும் வெளியாகி இருக்கிறது. இவர்கள் குடோனில் பதுக்கி வைத்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிமெண்ட் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட தொழிலாளர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர்களை வழிநடத்திய நபர்களுக்கு வலைவீசப்பட்டுள்ளது.