ஜனவரி 16, ஸ்ரீலங்கா (Sri Lanka): தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கும் நிகழ்வுகள் பல ஆண்டுகளாய் தொடர்ந்து வருகின்றன. சில நேரம் தமிழக மீனவர்களின் படகுகளை சேதப்படுத்தி, வலைகளை கிழித்து அத்துமீறல் போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதும் நடக்கும். இந்நிலையில், ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற நிலையில், அவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். 18 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, இலங்கையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மன்னார் பகுதியில் இவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Mumbai Ahmedabad Bullet Train: மும்பை - அகமதாபாத் புல்லட் இரயில் சேவை: மின்சார பணிகளுக்கான ஒப்பந்தத்தில் வெற்றியடைந்த எல்&டி நிறுவனம்.. ரூ.15,000 கோடி செலவில் பணிகள்.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)