GST Precentage: ஜி.எஸ்.டி என்றால் என்ன?.. எந்தெந்த பொருளுக்கு எவ்வுளவு ஜி.எஸ்.டி பிடித்தம் தெரியமா?..!

மாநில அரசுக்கு ஏற்படும் வருவாய் பாதிப்பை மத்திய அரசு வழங்கி ஈடு செய்யும்.

Respective: GST Percentage

டிசம்பர், 8: இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் சேவைக்கான மறைமுக வாரியாக சரக்கு மற்றும் சேவை வரி என்ற Goods Service Tax (GST) சட்டம் கடந்த 2017ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு நாடுதழுவிய அளவில் அமல்படுத்தப்பட்டது. இதனால் இந்திய அளவில் மத்திய அரசுக்கு நேரடி வருவாய் நிதி ஆதாரம் கிடைத்தது. மாநில அரசுக்கு ஏற்படும் வருவாய் பாதிப்பை மத்திய அரசு வழங்கி ஈடு செய்யும்.

ஜி.எஸ்.டிக்கு முன்னதாக அந்தந்த மாநில அரசுகள் தங்களுக்கு ஏற்றாற்போல நேரடி மற்றும் மறைமுக வரிகளை மாநிலத்தில் அமல்படுத்தி இருந்தது. வணிகர் தனது பொருளை சில்லறை விலையில் விற்பனை செய்ய, அதன் உற்பத்தியில் இருந்து ஜி.எஸ்.டி வரி பிடித்தம் செய்யப்படுகிறது. ஜி.எஸ்.டி தொகை வணிகர் அல்லது வர்த்தகரால் நேரடியாக அரசுக்கு அனுப்பப்படுகிறது. அது நான்கு வகைகளாகவும் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்படுகிறது. அதன்படி,

  1. மத்திய சரக்கு & சேவை வரி (CGST)
  2. மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST)
  3. ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (IGST)
  4. யூனியன் பிரதேச சரக்கு மற்றும் சேவை வரி (UTGST)

அடுக்கு வரியினை நீக்குதல், சிறுவணிகருக்கான விளக்கு வரம்பு உயர்த்துதல், இந்திய பொருட்களை வெளிநாடுகளில் சந்தைப்படுத்துதல் போன்று பல்வேறு விஷயங்களுக்கு ஜி.எஸ்.டி வரிப்பிடித்தம் உதவுகிறது. ஜி.எஸ்.டி உபயோகிப்பாளர்களுக்கு என GSTIN அடையாள எண் மாநிலங்கள் மற்றும் பேன் கார்டின் அடிப்படையில் வழங்கப்படும். இது அவர்களின் நிறுவனத்தை பதிவு செய்ய உதவி செய்கிறது. #PostOfficeSchemes: “வங்கியை விட அதிக பலன்” அஞ்சல் துறையில் அசத்தலான சேமிப்பு திட்டங்கள்.. மக்களே தெரிஞ்சிக்கோங்க.! 

வரி இல்லாத பொருட்கள்:

நாப்கின், உப்பு, இயற்கை தேன், முட்டை, கைத்தறி, முத்திரை, நீதித்துறை ஆவணம், கற்களால் செய்யப்பட்ட தெய்வ சிலைகள், வலுவூட்டப்பட்ட பால், வளையல், பழங்கள், தயிர், கொண்டைக்கடலை மாவு, காய்கறிகள், அச்சிடப்பட்ட புத்தகம், செய்தித்தாள், தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்தாமல் தயாரிக்கப்படும் ராக்கி, ரூபாய் ஆயிரத்திற்கும் கீழ்கட்டணம் வசூல் செய்யப்படும் ஹோட்டல் மற்றும் லாட்ஜுகள், வங்கி சேமிப்பு கணக்குகள், ஜன்தன் யோஜனா மீதான கட்டணங்கள் போன்றவற்றுக்கு வரி கிடையாது.

5% வரி உள்ள பொருட்கள்:

ஆடை நீக்கிய பால் பொடி, உறைந்த காய்கறி, மீன் பில்லட், தேனீர், பீசா, ரொட்டி, முத்திரை இல்லாத தயாரிப்புகள், அகர்பத்தி, நறுக்கிய காய்ந்த மாம்பழம், உயிர்காக்கும் படகுகள், கையால் செய்யப்படும் தரை விரிப்பு, நிலக்கரி, உரங்கள், காபி, மசாலா, ஆயுர்வேத மருந்துகள், முந்திரி பருப்பு, இன்சுலின், எத்தனால் எரிபொருள், சாலை வான் வழியில் போக்குவரத்து சேவைகளை கொண்டுள்ள சிறிய ஹோட்டல்கள் மற்றும் உணவகம், மதுபானம் எடுத்துச் செல்லும் வகையில் உள்ள ஹோட்டல்கள், ரூபாய் 7500க்கும் குறைவான கட்டணம் கொண்ட ஹோட்டல் சேவைகளுக்கு 5% ஜி.எஸ்.டி வரி உண்டு.

12% வரி உள்ள பொருட்கள்:

உறைந்த இறைச்சி பொருள்கள், ஊறுகாய், சீஸ், பழச்சாறு, கைப்பேசி, மனிதனால் தயார் செய்யப்பட்ட நூல், நகை பெட்டி, மருந்து, தையல் இயந்திரம், புகைப்படம், ஓவியம், கண்ணாடி போன்றவற்றிற்கான மரச்சட்டம், வணிக வகுப்புக்கான விமான டிக்கெட், ரூபாய் 100-க்குள் எடுக்கப்படும் திரைப்பட டிக்கெட் போன்ற சேவைகளுக்கு 12% ஜி.எஸ்.டி வரி உண்டு.

18% வரி உள்ள பொருட்கள்:

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, பாஸ்தா, பாதுகாப்பு கண்ணாடி, கண்ணாடி சார்ந்த பொருட்கள், குழாய்கள், மின்விசிறி, சாக்லேட், டிராக்டர், சேவிங் பொருட்கள், சலவைத்தூள், துணி துவைக்கும் இயந்திரம், தொலைக்காட்சி, வாசனை திரவியம், தோல் சார்ந்த ஆடை, குக்கர், செயற்கை பழங்கள், உடற்பயிற்சி உபகரணங்கள், மெத்தை, கதவு, அலுமினிய சட்டம், வீடியோ கேம், ஐஸ்கிரீம், ஷாம்பு, சூட்கேஸ், முக அழகு பொருட்கள், குளிர்சாதன பொருட்கள், வாட்டர் ஹீட்டர், மார்பில், கிரானைட், கைக்கடிகாரம், தொலைநோக்கி, இசை கருவி மற்றும் அதன் பாகம், எஞ்சின் பாகம், மின்பலகை, தோட்டாக்கள், மானிட்டர்கள் மற்றும் நீச்சல் குளங்கள், சிகரெட், ரூபாய் 7500க்கு மேல் கட்டணம் வசூல் செய்யும் ஹோட்டல்கள் போன்றவற்றுக்கு 18% ஜி.எஸ்.டி வரி உண்டு.

28% வரி உள்ள பொருட்கள்:

சாக்லேட் பூசப்பட்ட இனிப்புகள், சாயம், பீங்கான் ஓடு, பாத்திரம் கழுவி, தனிப்பயன்பாடு விமானம், புகையிலை, பீடி, படகு, விற்பனை இயந்திரம், வால்பேப்பர், ஆட்டோமொபைல் மோட்டார் சைக்கிள், பான் மசாலா, சிகரெட், சிமெண்ட், எடை பார்க்கும் இயந்திரம், ரேஸ் கிளப் பந்தயம், சூதாட்டம், 5 நட்சத்திர விடுதிகள், பொழுதுபோக்கு & சினிமா போன்றவற்றுக்கு ஜி.எஸ்.டி வரி 28% உண்டு.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 8, 2022 02:33 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif