World Economic Forum: 2047ல் மிகப்பெரிய பொருளாதார நாடாகும் இந்தியா - உலக பொருளாதார மன்ற தலைவர் பேட்டி.!

தன்னிறைவு பெற்ற இந்திய நாடு விரைவில் சுயச்சார்பின் உச்சத்தை கடந்து, மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாகும்.

Borge Brende (Photo Credit: @PTI_India X)

பிப்ரவரி 22, புதுடெல்லி (New Delhi): இந்தியாவை அடுத்த 20 ஆண்டுகளில் வல்லரசாக்கும் எதிர்கால நலன் சார்ந்த திட்டங்கள் அதிகம் செயல்படுத்தப்பட்டு இருக்கின்றன. அதேபோல, அந்நிய நேரடி முதலீடுகளும் ஈர்க்கப்பட்டு வருகின்றன. இதன் வாயிலாக வேலைவாய்ப்புகள் அதிகரித்து தொழில்கள் பெருகுவதால் அரசுக்கு வருவாய் அதிகரிக்கிறது. தன்னிறைவுபெற்ற இந்தியாவை உருவாக்கவும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உலகளவில் இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு புதிய வளர்ச்சிப்பாதையை நோக்கி செல்கிறது. அதனை உறுதி செய்யும்பொருட்டு, பிற நாடுகளில் இருந்து தொடர்ந்து முதலீடு, நட்புறவு ரீதியான பயணங்கள் போன்றவை உறுதுணையாக அமைகிறது. Football Player Prisoned Rape Case: 23 வயது இளம்பெண்ணை கழிவறையில் பலாத்காரம் செய்த விவகாரம்; பிரபல கால்பந்தாட்ட வீரருக்கு சிறை தண்டனை விதிப்பு.!

2047ல் மிகப்பெரிய பொருளாதார நாடு: இந்நிலையில், உலக பொருளாதார மன்றத்தின் தலைவர் (World Economic Forum WEF) போர்ஜ் பிரெண்டே (Borge Brende), இந்தியாவின் எதிர்கால பொருளாதார இலக்குகள், 2047ல் மூன்றாவது பெரிய பொருளாதாரம் மற்றும் வளர்ந்த தேசமாக மாறும் என கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், "அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தியா 10 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் பாதையில் இருக்கிறது. இந்தியா அதுசார்ந்த முக்கிய சீர்திருத்த நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறது. பொருளாதார கட்டமைப்பில் இந்தியா நன்றாக உள்ளது. 2047ல் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா மிகப்பெரிய பொருளாதார நாடாக கட்டாயம் மாறும்" என தெரிவித்தார்.