பிப்ரவரி 22, பிரேசில் (World News): பிரேசில் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட வீரர் டானி ஆல்வஸ் (Dani Alves). இவர் முன்னாள் பார்சிலானா அணியின் வீரரும் ஆவார். இந்நிலையில், இவர் ஸ்பெயினில் உள்ள இரவு விடுதி ஒன்றில், பெண் ஒருவரை பலாத்காரம் செய்ததாக குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு, அவரின் மீதான குற்றசாட்டுகள் உறுதி செய்யப்பட்டு தற்போது சிறை தண்டனைக்கு உள்ளாகி இருக்கிறார்.
40 வயதில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை: சிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவராக இருந்து வந்த டானி (வயது 40), தற்போது பெண் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் நான்கரை ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. விசாரணையின் போது டானி, தன்னை நிரபராதி என்று கூறி வந்த நிலையில், தனது இரண்டு பிள்ளைகளை மேற்கோளிட்டு பேசி குற்றத்தில் இருந்து தப்பவும் முயன்று இருக்கிறார். Mohammed Shami ruled out of IPL: கணுக்கால் காயத்தினால் ஐபிஎல் 2024 தொடரில் இருந்து விலகுகிறார் முகம்மது ஷமி; குஜராத் டைட்டன்ஸ்க்கு இழப்பு.!
கழிவறையில் வைத்து இளம்பெண் பலாத்காரம்: கடந்த டிசம்பர் 30, 2022 அன்று பார்சிலோனா இரவு விடுதியில், 23 வயது இளம்பெண்ணை டானி கழிவறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பெண்ணின் விருப்பத்தின் பேரில் தனிமையில் இருந்தேன் என கூறிய டானியின் தகவல் முதலில் அதிர்ச்சியை தந்தாலும், பெண்ணிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அம்பலமானது.
ரசிகர்களின் அன்பை பெற்றவருக்கு நடந்த சோகம்: கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட டானியின் மீதான வழக்கு விசாரணை தற்போது நிறைவுபெற்று, அவருக்கு நான்கரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. விளையாட்டு வீரராக தனது வாழ்வில் 41 கோப்பைகளை வாங்கி குவித்து, ரசிகர்களின் அன்பை பெற்றவராகவும் இருந்து வந்துள்ளார். அவரின் குற்றச்செயல் அவரின் மீதான பார்வையை திருப்பி, இன்று சிறைக்கு அனுப்பி வைத்துள்ளது.