President Speech on Budget 2025: "இந்தியாவின் வளர்ச்சிக்கான பட்ஜெட்" - குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்ற கூட்டத்தொடர் உரை.!

பெண்கள், குழந்தைகளின் முன்னேற்றத்திற்கும், இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை ஒட்டுமொத்த இந்திய மக்களின் முன்னேற்றத்திற்கும் மத்திய அரசு பணியாற்றி வருகிறது என குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பேசினார்.

President Speech on Budget 2025: "இந்தியாவின் வளர்ச்சிக்கான பட்ஜெட்" - குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்ற கூட்டத்தொடர் உரை.!
President Droupadi Murmu (Photo Credit: @ANI X)

ஜனவரி 31, புதுடெல்லி (New Delhi): ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்த 2025ம் (Budget 2025) ஆண்டுக்கான பட்ஜெட், பிப்ரவரி 01, 2025 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் 2025-2026 ஐ முன்னிட்டு, இன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு (President Droupadi Murmu) ஒருங்கிணைந்த மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் முன்னிலையில் உரையாற்றினார். அதனைத்தொடர்ந்து, நாளை நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் (Nirmala Sitaraman) தனது 8 வது பட்ஜெட் உரையை மக்களவையில் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் 2025 - 2026 இந்திய மக்களின் எதிர்பார்ப்பை ஏற்புத்தியுள்ள பட்ஜெட் என்பதால், உலகளவிலும் கவனிக்கப்படும். PM Modi on Budget 2025: "ஏழைகளின் வாழ்க்கை செழிக்க மகாலட்சுமியை வேண்டுகிறேன்" - பிரதமர் நரேந்திர மோடி..! 

குடியரசு தலைவர் உரையில் பேசியதாவது:

இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, "இந்தியா தனது 75 வது குடியரசு தினத்தை சமீபத்தில் சிறப்பித்தது. இந்த நாளில் அரசியலமைப்பை உருவாக்கிய அண்ணல் அம்பேகர் உட்பட அனைவரையும் மனமார வணங்குகிறேன். மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறேன். பிரயாகராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்கிறேன். மத்திய அரசு பலகோடி குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்டு இருக்கிறது. பெண்கள், குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு அரசு உதவியாக இருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில், அரசு மும்மடங்கு வேகத்தில் செயல்பட்டு வளர்ச்சியை உறுதி செய்துள்ளது. Budget 2025: நீண்ட எதிர்பார்ப்புடன் பட்ஜெட் 2025: தேதி & நேரம் எப்போது? அரசின் திட்டம் என்ன? விபரம் உள்ளே.! 

வக்பு சட்டம் & ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் உறுதி:

பிரதமரின் உழவர் நலத்திட்டம், வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்க்கையில் புதிய மறுமலர்ச்சியை உண்டாக்கியது. மக்களுக்கான பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. ஒட்டுமொத்த துறையிலும் வளர்ச்சி ஏற்பட்டு, இந்தியா உலக நாடுகளுக்கே முன்னுதாரணமாக திகழுகிறது. விவசாயிகளுக்காக உதவித்தொகையாக ரூ.41,000 கோடி வழங்கப்பட்டு இருக்கிறது. 2.25 கோடி சொத்து அட்டை மக்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. மிகக்கடினமான வறுமை தன்மையில் இருந்த 25 கோடி மக்கள் மீட்கப்பட்டு இருக்கின்றனர். வக்பு சட்டத்தினை இந்தியாவில் அமல்படுத்துவது உறுதி செய்யப்படும், அது வளர்ச்சிக்கானது ஆகும். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம், இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு அரசின் செயல்பாடுகள் எளிமையாக்கப்படும். அதனை அமல்படுத்துவதே அரசின் நோக்கம். அடித்தட்டு நிலையில் உள்ள மக்களும் தொழில்நுட்பத்தை உபயோகம் செய்யும் நிலை உருவாகிவிட்டது. Budget 2025 Income Tax Relief: 2025 பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுபவை.. வருமான வரியில் அதிரடி மாற்றங்கள் எதிர்பார்ப்பு..!

முதியவர்களும் பயன் பெறுகிறார்கள்:

நடுத்தர வர்க்கத்தில் இருக்கும் மக்களின் மேம்பாட்டை உறுதி செய்ய 8 வது கூட்டுக்குழு பரிந்துரை உதவி செய்யும் என நம்புகிறேன். 70 வயதுக்கும் அதிகமாக இருக்கும் 6 கோடி மக்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் பயன் பெற்று இருக்கின்றனர். மேக் இன் இந்தியா திட்டம் வேலைவாய்ப்புகளை அதிகரித்துள்ளது. இந்தியாவில் எவ்வித தடையும் இன்றி டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடக்கிறது, மக்களும் அதனை பயன்படுத்துகின்றனர். 204 ல் வலிமையான பாரதம் என்பது நம் தாரக மந்திரம் ஆகும். இந்த விஷயம் உலகளவில் கவனத்தை பெற்றுள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இரயில் வழித்தடம் இணைக்கப்பட்டுள்ளது. புதிதாக இந்திய விமானத்துறை நிறுவனங்கள் 1700 விமானங்கள் வாங்கவுள்ளது. இந்திய மெட்ரோ இரயில் வழித்தடம் 1000 கிமீ என்ற உயரிய இலக்கை எட்டியுள்ளது. இதனால் 3 வது மிகப்பெரிய மெட்ரோ இரயில் வழித்தடத்தை கொண்ட நாடாக இந்தியா உயர்ந்துள்ளது. சைபர் குற்றத்தடுப்பு பாதுகாப்பு விஷயத்தில் அரசு தீவிர முயற்சி & முன்னெடுப்புடன் பணியாற்றி வருகிறது. இந்தியா தொழில்நுட்ப விஷயங்களில் மிகசிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறது. யுபிஐ பணப்பரிவர்த்தனை விஷயத்தை உலகமே உற்றுநோக்குகிறது" என பேசினார்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)



தொடர்புடைய செய்திகள்

Late Night Sleep: தொடர்ந்து இரவில் தாமதமாகத் தூங்குகிறீர்களா..? மோசமான நோய் வரக்கூடும்..!

RCB Vs GG Highlights: மீண்டும் மீண்டுமா?.. ஹாட்ரிக் தோல்வி.. சொந்த மண்ணில் 3 வது முறை.. குஜராத் அசத்தல் வெற்றி.!

DC Vs MI: டெல்லி கேபிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ்; பெண்கள் பிரீமியர் லீக்.. ஆட்டம் எப்போது? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.!

RCB Vs GG: சொந்த மண்ணில் தட்டுத்தடுமாறிய பெங்களூர்.. ரன்கள் குவிக்க போராட்டம்.. குஜராத் அணிக்கு 126 ரன்கள் இலக்கு.!

Share Us