1,11,111 Laddu to Ayodhya Ram Temple: அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலுக்கு செல்லும் 1,11,111 கிலோ லட்டுகள்; ராம நவமியை முன்னிட்டு பிரசாதங்கள் அனுப்பி வைப்பு.!
ராமர் கோவில் திறப்பு விழாவைபோல, ராம நவமிக்கும் லட்டுகள் பிரசாதமாக அயோத்தி ராமர் கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஏப்ரல் 15, அயோத்தி (Ayodhya News): ஏப்ரல் 17ம் தேதி உலகளவில் உள்ள இந்துக்கள் மற்றும் ராம பக்தர்களால் ராம நவமி பண்டிகை சிறப்பிக்கப்படுகிறது. அன்றைய நாளில் ராமர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கடந்த ஜனவரி மாதம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இதனால் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரில் ராமர் கோவில் கட்டப்பட்ட பின் கொண்டாடப்படும் முதல் ராமநவமி (Ram Navmi 2024) இது என்பதால், அயோத்தி நகரம் மீண்டும் விழாக்கோலம் கொண்டுள்ளது. Ram Navmi 2024: ஸ்ரீ ராம நவமி 2024 உற்சவம்.. வழிபாடு முறைகளும், விரத நன்மைகளும்.. முழு விபரம் இதோ.!
ஒருலட்சம் கிலோ லட்டுகள் அனுப்பி வைப்பு: ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு பிகார் மாநிலத்தைச் சார்ந்த தேவராகன்ஸ் பாபா நிர்வாகம் சார்பில் அயோத்தி ராமர் கோவிலுக்கு 40,000 கிலோவுக்கு அதிகமான லட்டுகள் பிரசாதமாக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது ராம நவமியை முன்னிட்டு ஒரு லட்சம் (1,11,111) கிலோவுக்கு அதிகமான லட்டுகள் பிரசாதமாக அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் விநியோகம் உட்பட அனைத்தும் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. தற்போது தேர்தல் நேரம் என்பதால், அது சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்துள்ள மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.