ஜூன் 26, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் "ஜெய் ஸ்ரீ ராம்" என்ற கோஷத்தை சொல்ல மறுத்த இஸ்லாமிய ஆட்டோ ஓட்டுனர் கடுமையாக தாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கடந்த ஜூன் 22ஆம் தேதி பெங்களூர், சம்பிகேஹள்ளி பகுதியில் பைக் மெக்கானிக் சமீருடன் ஆட்டோ ஓட்டுனர் வசீம் (வயது 35) சென்று கொண்டிருந்தார். இவர்கள் அங்குள்ள காலியான இடத்தில் வாகனத்தை நிறுத்தி ஓய்வு எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தை அங்கிருந்த 8 பேர் கும்பல் கவனித்துள்ளது. Paracetamol Tablets: பாராசிட்டமால் மாத்திரைக்கு அதிரடி தடை.. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
இஸ்லாமியர்களை குறிவைத்து தாக்குதல் :
இந்த கும்பல் மது போதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், இருவரின் பெயரையும் கேட்டு விசாரித்துள்ளனர். அப்போது இஸ்லாமியர்கள் என்று தெரிந்து கொண்டவர்கள், "ஜெய் ஸ்ரீ ராம்" கோஷம் கூற சொல்லி வாக்குவாதம் செய்துள்ளனர். இந்த விஷயத்திற்கு இருவரும் மறுப்பு தெரிவித்ததால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சமீர் எப்படியோ அங்கிருந்து தப்பி ஓடிவிட்ட நிலையில், கையில் சிக்கிய வஸீமை அந்த கும்பல் சுற்றி வளைத்து தாக்கியிருக்கிறது.
காது கேட்கும் திறனை இழந்த ஆட்டோ ட்ரைவர் :
இதனால் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டவர், பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது வலது காது கேட்கும் திறன் இழக்கப்பட்டதாக மருத்துவ பரிசோதனையின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.