
மே 28, ஆந்திர பிரதேசம் (Andhra Pradesh News): தெலுங்கு திரையுலகில் பல சாதனைகளை படைத்த புகழ்பெற்ற நடிகராகவும், தெலுங்கு தேச கட்சியின் சிறந்த அரசியல்வாதியாகவும், ஆந்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராகவும் இருந்தவர் நந்தமுரி தாரக ராமராவ் (Nandamuri Taraka Rama Rao). கடந்த 1949 ஆம் ஆண்டில் மனதேசம் என்ற படத்தின் மூலம் திரைப்பட பயணத்தை தொடங்கிய என்டிஆர்(NTR), 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த என்டிஆர்:
இதனை தொடர்ந்து 1982 ஆம் ஆண்டு தெலுங்கு தேச கட்சியையும் நிறுவினார். இவர் கடந்த 1983ல் தேர்தலில் வெற்றி பெற்று ஆந்திராவில் முதல் காங்கிரஸ் அல்லாத முதலமைச்சரான நிலையில், தனது பதவி காலத்தில் மதிய உணவு திட்டம், ஏழைகளுக்கான வீட்டு திட்டங்கள், ஒரு கிலோ அரிசிக்கு ரூ.2 மட்டும் என முக்கிய நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி மக்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தார். கடந்த 1996ல் என்டிஆர் காலமானாலும் சினிமாவிலும், அரசியலிலும் புகழ்பெற்ற நபராக இருந்தார்.
Ajithkumar Racing: யூடியூப் சேனல் தொடங்கிய அஜித்குமார்.. ரேசிங்கில் தீவிரம்.!
தாத்தாவின் பிறந்தநாளையொட்டி மரியாதை செலுத்திய ஜூனியர் என்டிஆர் & கல்யாண் ராம்:
இந்த நிலையில் ஆந்திர மாநில அரசும் என்டிஆர் ஜெயந்தி இனி ஒவ்வொரு ஆண்டும் மே 28ஆம் தேதி அன்று மாநில விழாவாக கொண்டாடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இன்று என்டிஆரின் 102வது பிறந்தநாள் என்பதால், அதனை முன்னிட்டு அவரது பேரன்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் கல்யாண்ராம் தங்களது தாத்தாவின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தி, என்டிஆர் மக்களுக்கு செய்த சேவைகளை நினைவு கூர்ந்தனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
போலீஸ் பாதுகாப்பு :
பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல்வாதிகள் என மக்கள் பலரும் என்டிஆர் அவர்களின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்த வருவதால், காவல்துறையினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
ஜூனியர் என்டிஆர் & கல்யாண் ராம் மரியாதை செலுத்திய வீடியோ :
VIDEO | Hyderabad: Actors Jr NTR (@tarak9999) and his brother Kalyan Ram (@NANDAMURIKALYAN) pay floral tributes to their grandfather, Nandamuri Taraka Rama Rao (NTR), on the 102nd birth anniversary of legendary actor, Telugu Desam Party (TDP) founder, and former Chief Minister of… pic.twitter.com/koS1Euufzp
— Press Trust of India (@PTI_News) May 28, 2025