Bharat E Mart: அஞ்சல் துறையின் பாரத் இ மார்ட்.. நாடு முழுவதும் இனி வணிகம் செய்யலாம்..!

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் இந்தியாவுக்கு வெளியிலும் விற்பனை செய்யப்படும் வகையில், ‘பாரத் மார்ட்’ திட்டத்தை இந்திய அரசு துபாயில் தொடங்கி உள்ளது.

Digital Marketing (Photo Credit: Pixabay)

ஜூலை 01, புதுடெல்லி (New Delhi): அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (சி.ஏ.ஐ.டி) மற்றும் டிரிப்டா டெக்னாலஜிஸ் ஆகியவற்றுடன் இணைந்து இந்திய அஞ்சல் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன் மூலம் ‘பாரத் இ மார்ட்’ என்ற போர்ட்டல் செயல்படுத்த முடியும். அதாவது இது வர்த்தகர்களிடமிருந்து பொருட்களை எடுத்துச் சென்று, நாடு முழுவதும் மக்களின் வீடுகளில் நேரடியாக டெலிவரி செய்வதாகும். இதன் மூலம் சி.ஏ.ஐ.டி உடன் தொடர்புடைய எட்டு கோடி வர்த்தகர்களுக்கு பயனளிக்கும் விதத்தில் உள்ளது. TN Weather Update: இன்று கொட்டப்போகும் கனமழை.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

நாட்டின் சிறு வணிகர்களுக்கும் நாடு முழுவதும் தேவையான போக்குவரத்து ஆதரவை வழங்குவதோடு, அவர்களின் வணிகத்தையும், வேலை வாய்ப்பையும் அதிகரிக்கும். இந்திய தபால் துறை மக்களுக்கு பயனளிக்கும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்கிடையில் இந்த ‘பாரத் இ பார்ட் திட்டம்’ (Bharat E Mart Online shopping) நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.