நவம்பர் 09, சென்னை (Cinema News): இந்தியா முழுவதும் பெடக்ஸ் கொரியர் மோசடி (Scam) மற்றும் ஆன்லைன் டிரேடிங் மோசடி மூலமாக சைபர் க்ரைம் மோசடி கும்பல்கள் பொதுமக்களிடமிருந்து கொள்ளை அடித்து வருகின்றனர். இதுதொடர்பாக பல்வேறு வழக்குகள் நாடு முழுவதும் உள்ள பல காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். தமிழகத்திலும் இந்த மோசடியில் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். Idly Kadai Release Date: தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’.. எப்போது ரிலீஸ் தெரியுமா?!
இந்நிலையில், பிக் பாஸ் (Bigg Boss Tamil Season 8) நிகழ்ச்சியில் சமீபத்தில் வெளியான எபிசோடில் சௌந்தர்யா (Soundariya) தான் 17 லட்சம் ஏமாந்தது பற்றி பேசி இருந்தார். ஏற்கனவே, சௌந்தர்யா மீது கலவையான விமர்சனங்கள் இருப்பதால் அவர் மக்களிடம் சிம்பதி கிரியேட் பண்ண இப்படி ஒரு கதையை சொல்லி இருக்கிறார் என விமர்சனம் செய்யப்பட்டது. ஆனால், தற்போது உண்மையில் என்ன நடந்தது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. சௌந்தர்யா தன்னுடைய தோழிகளுடன் இந்த 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிம்லாவுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அங்கு இருந்து திரும்பி வரும்போது ட்ரெயினில் தன்னுடைய போனை சார்ஜர் போட்டு இருக்கிறார். பொதுவாக ரயிலில் சார்ஜர் பாயிண்ட் ஜன்னல் ஓரமாகத்தான் அமைந்திருக்கும். அப்படி, சவுந்தர்யா சார்ஜர் போட்ட பிறகு திடீரென ஒருவர் அந்த போனை தூக்கிக் கொண்டு ஓடி இருக்கிறார்.
இதுகுறித்து, டெல்லி காவல்நிலையத்தில் சௌந்தர்யா புகார் கொடுத்திருக்கிறார். அதன் பின்னர், சில மாதங்களுக்கு முன் சௌந்தர்யாவுக்கு வீடியோ கால் ஒன்று வந்திருக்கிறது. அதில், காவல் அதிகாரி போல் ஒருவர் பேசி இருக்கிறார். உங்களுடைய நம்பர் மூலம், சிம்லாவில் இருந்து சைனாவுக்கு சில முக்கிய தகவல்கள் சென்றிருக்கின்றன. இதுதொடர்பாக விசாரிக்க தான் உங்களை தொடர்பு கொண்டேன் என சொல்லி இருக்கிறார். மேலும், சௌந்தர்யாவிடம் அவருடைய ஆதார் கார்டு நம்பரையும் கேட்டு வாங்கி இருக்கிறார். கொடுத்த சில நிமிடங்களில் சௌந்தர்யாவின் பேங்க் அக்கவுண்டில் இருந்தா 17 லட்சம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து சௌந்தர்யாவின் பெற்றோர், காவல்நிலையத்தில் கொடுத்த எஃப்ஐஆர் (FIR) அறிக்கையை வெளியிட்டனர். தற்போது, சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.