IPL Auction 2025 Live

Ramadan 2024: தென்பட்ட பிறை.. ரமலான் நோன்பு இன்று தொடக்கம்.. அரசு தலைமை காஜி அறிவிப்பு..!

நேற்று பிறை தென்பட்டதால் இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.

Ramadan 2024 (Photo Credit: pixabay)

மார்ச் 12, சென்னை (Chennai): இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக ரமலான் (Ramadan) உள்ளது. இஸ்லாமிய காலண்டரின் 9வது மாதத்தில் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை கொண்டாடுப்படுவதற்கு முன்பு இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள்.

தென்பட்ட பிறை: ஒவ்வொரு பகுதியிலும் பிறை தெரிவதற்கு ஏற்ப ரமலான் மாதம் தொடங்கும். சவூதி அரேபியாவில் நேற்று முன்தினம் ரமலான் பிறை தென்பட்டது. இதனால் நேற்று முதல் சவுதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ரமலான் மாதம் நோன்பு தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டிலும் பிறை பார்க்கப்பட்டு ரமலான் மாதம் தொடங்கிவிட்டதாக தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் (Chief Minister Kazi Salahuddin Mohammed Ayub) அறிவித்துள்ளார். PM Modi In Pokhran: பொக்ரானில் மாஸ் காண்பிக்கப்போகும் இந்திய இராணுவம்; நேரில் பார்க்க விரையும் பிரதமர்.! விபரம் இதோ.!

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கண்ணியமிகு ஆலிம்கள் மற்றும் இஸ்லாமியச் சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... இன்று 11.03.2024 திங்கள்கிழமை புனிதமிகு ரமளான் பிறை பார்க்கப்பட்டது என தமிழ்நாடு அரசு தலைமை காஜி அவர்கள் அறிவித்துள்ளார்கள். ஆதலால் ரமளான் மாதம் தொடங்கிவிட்டது. முஃமின்கள் நோன்பு நோற்பதுடன், தராவீஹ் தொழுகை உள்ளிட்ட அனைத்து அமல்களையும் சிறப்பாக நிறைவேற்றிக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.