India National Cricket Team vs West Indies (Photo Credit : @BCCI X)

அக்டோபர் 13, புதுடெல்லி (Sports News): இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி - இந்திய தேசிய கிரிக்கெட் அணியுடன் (India - West Indies) ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. அந்த வகையில், முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து, இரண்டாவது ஆட்டம் அக்டோபர் 10ஆம் தேதியான இன்று முதல் தொடங்கி நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய தேசிய கிரிக்கெட் அணி Vs மேற்கிந்திய தீவுகள் தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs West Indies National Cricket Team) மோதுகிறது. இந்த ஆட்டம் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.

இந்தியா எதிர் வெஸ்ட் இண்டீஸ் அணி கிரிக்கெட் போட்டி (India Vs West Indies Cricket Match):

இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய தேசிய கிரிக்கெட் அணி 134.2 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 518 நாட்கள் எடுத்து போட்டியை டிக்ளர் செய்தது. இதனை அடுத்து மறுமுனையில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 81.5 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்து 248 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய அணிக்கு எதிராக ரன்கள் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் ஒரு சில ஆட்டக்காரர்கள் தவிர பிற அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறியதால் அணி தடுமாற்றத்துக்குள்ளாகியது. India Women Vs Australia Women: தெறிக்கவிட்ட அலிஷா.. 2வது தோல்வி.. இந்தியா Vs ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட் போட்டியில் சுவாரஷ்யம்.!

வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்கோர்கார்டு:

அந்த அணியின் சார்பில் இரண்டாவது இன்னிங்ஸ்ல் விளையாடிய ஜான் காம்பெல் 199 பந்துகளில் 115 ரன்கள் எடுத்திருந்தார். தஜெனரின் சந்தர்பால் 30 பந்துகளில் 10 ரன்கள் எடுத்திருந்தார் ஷாய் ஹோப் 214 பந்துகளில் 103 ரன்கள் எடுத்திருந்தார். ரோஸ்டன் சேஸ் 72 பந்துகளில் 40 ரன்கள் எடுத்திருந்தார். டெவின் இம்லாச் 13 பந்துகளில் 12 ரன்கள் எடுத்திருந்தார். ஜஸ்டின் 85 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்தார். ஜெய்டன் சீல்ஸ் 67 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்தார். மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 118.5 ஓவர்கள் பேட்டிங் செய்திருந்த நிலையில், 390 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் சார்பில் பந்து வீசியவர்களில் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டையும், முகமது சிராஜ் 2 விக்கெட்டையும், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் தலா 1 விக்கெட்டையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தனர். தொடர்ந்து இந்திய அணி 2வது இன்னிங்ஸில் களமிறங்க உள்ளது.

மாஸ் சம்பவம் செய்யும் முகம்மது சிராஜ்: