Chocolate Day 2024: காதலர் தின வாரத்தின் சாக்லேட் தினம்.. எதற்காக கொண்டாடுகிறோம் தெரியுமா?.!
காதலர் தின கொண்டாட்ட வாரத்தில் மூன்றாவது நாளான இன்று சாக்லேட் தினம் கொண்டாடப்படுகிறது.
பிப்ரவரி 09, சென்னை (Chennai): ஆண்டுதோறும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கான கொண்டாட்டங்கள் அந்த வாரம் முழுவதும் இருக்கும். அந்த வகையில், முதல் நாள் ரோஜா தினத்தில் தொடங்கி, மூன்றாம் நாள் சாக்லெட் தினம் (Chocolate Day) தற்போது வந்து விட்டோம். சாக்லேட் என்றால் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. அனைவருக்கும் பிடித்தமான இனிப்பு இது. அது மட்டுமல்லாமல் சாக்லேட்டை சுவைக்கும்போது மனதில் இன்பமான நினைவுகள் அலைமோதும். Violence In Uttarakhand: உத்தரகாண்ட்டில் பயங்கர வன்முறை.. பதற்றம் நீடிப்பதால் ஊரடங்கு உத்தரவு..!
சாக்லேட் தின வரலாறு: காலங்காலமாக பாசத்தை வெளிப்படுத்த காதல் மொழியாக சாக்லேட் பயன்படுத்தப்படுகிறது. 1840 ஆம் ஆண்டு வாலண்டைன்ஸ் வீக் கொண்டாட்டங்களில் அவை ஒரு முக்கிய அங்கமாக மாறியது. விக்டோரியன் கால கட்டத்தில் சாக்லேட்டுகளை பரிமாறிக்கொள்வது மிகவும் பிரபலமாக இருந்ததால், அது இல்லாமல் எந்த விருந்தும் நிறைவடையாது. இந்த காலகட்டத்தில், காதலில் இருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான பரிசுப் பரிமாற்றத்தில் சாக்லேட்டுகள் ஒரு பகுதியாக மாறியது. அது தான் காலப்போக்கில் உலகம் முழுதும் பரவியது. அதனால் இந்த நாளில், உங்கள் காதலர்/காதலிக்கு சாக்லேட் கொடுத்து மகிழ்வியுங்கள்.