Violence In Uttarakhand (Photo Credit: @ANI X)

பிப்ரவரி 09, உத்தரகாண்ட் (Uttarakhand): உத்தரகாண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் சிங் தாமி தலைமையில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்ற வருகிறது. நேற்று இந்திய நாட்டிலேயே முதல்முறையாக உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் மசோதா மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில்தான் உத்தரகாண்ட் மாநிலம் ஹல்ட்வானியில் வன்முறை (Violence) வெடித்துள்ளது.

அதாவது பன்புல்புரா காவல் நிலையம் அருகே ஆக்கிரமிப்பு இடத்தில் உரிய அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக மதராசாவை கட்டப்பட்டு இருந்ததாகவும், இதனால் அந்த மதராசாவை நகராட்சி அதிகாரிகள் இடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த அந்தப் பகுதி மக்கள் கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். தொடர்ந்து சிலர் காவல் நிலையத்தில் தீ வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ஒரு சிலர் நேற்றிரவு டிரான்ஸ்பார்மர்க்கு தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் உத்தரகாண்டில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. AB de Villiers Issues Apology: விராட் கோலி குறித்து தவறான தகவல் வெளியீடு.. மன்னிப்பு கேட்ட ஏபி டி வில்லியர்ஸ்.. நடந்தது என்ன?.!

ஊரடங்கு உத்தரவு: இந்த வன்முறையில் இதுவரை 250 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அதே நேரம் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஹல்ட்வானியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கலவரக்காரர்களை கண்டதும் சுடுவதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த வன்முறையால் ஹல்ட்வானி மற்றும் நைனிடால் மாவட்டம் முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உத்தரகாண்டின் பதற்றமான பகுதிகளில் இணைய சேவைகளும் முடக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலம் முதல்வர் சிங் தாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றார்.