International Condom Day 2024: சர்வதேச ஆணுறை தினம் இன்று; ஆணுறை பயன்படுத்தவேண்டியதன் அவசியம், நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.!
ஆணுறையை நாம் பயன்படுத்தினால் மட்டுமே தேவையில்லாத கர்ப்பங்களை தவரிக்கவும், எய்ட்ஸ் போன்ற தொற்றுநோய்களில் இருந்து ஆண்-பெண் இருவரும் தற்காத்துக்கொள்ள உதவும்.
பிப்ரவரி 13, சென்னை (Chennai): உலகில் ஒவ்வொரு உயிரினமும் தனது சந்ததியை இயற்கையாக அதிகரிக்கிறது. அதேபோல, மனிதனும் தனது சந்ததியை துணையுடன் சேர்ந்து குறிப்பிட்ட பருவத்திற்கு பின்னர் அதிகரிக்கிறான். மனித வாழ்க்கையில் திருமணத்திற்கு பின்னர் மேற்கொள்ளப்படும் உடலுறவில், தம்பதிகளின் வாழ்க்கைக்கான முக்கிய விஷயங்கள் நிறைந்து கிடக்கின்றன. உடலுறவு விஷயத்தில் பாதுகாப்பு மற்றும் விருப்பம் ஆகியவை பிரதானமான ஒன்றாக கருதப்படுகிறது.
காதலர் தினத்திற்கு முன் ஆணுறை தினம்: பிப்ரவரி 14ம் தேதியை உலகமே காதலர் தினமாக (Lovers Day 2024) கொண்டாடும் வேளையில், அதற்கு முந்தைய நாளான இன்று உலக ஆணுறை தினம் சிறப்பிக்கப்படுகிறது. ஆணுறை எனப்படும் காண்டம், பாதுகாப்பான பாலியல் இன்பங்களை ஏற்படுத்த பயன்படுகிறது. பாலியல் ரீதியான நோய்த்தொற்றுகள் பரவாமலும் தடுக்க உதவி செய்கிறது. கடத்த 2009ம் ஆண்டு எய்ட்ஸ் ஹெல்த்கேர் அறக்கட்டளை சார்பில், பாலியல் ரீதியான நோய்கள் மற்றும் கர்ப்பத்தை தவிர்த்தல் போன்றவற்றை மக்களிடையே விழிப்புணர்வாக ஏற்படுத்த பிப்ரவரி 13 (Condom Day) அன்று அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
பாலியல் நோய்கள் விழிப்புணர்வு அவசியம்: இதனையடுத்தே ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13 அன்று சர்வதேச அளவில் ஆணுறை தினம் கொண்டாடப்படுகிறது. மனிதர்கள் பாலியல் விவகாரத்தில் ஆரோக்கியமான பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்ற விஷயத்தை இந்நாள் ஒவ்வொருவருக்கும் நினைவூட்ட வேண்டும். அது சார்ந்த விழிப்புணர்வுகள் ஒவ்வொருவருக்கும் சென்றடைய வேண்டும். ஆணுறைகள் கடந்த 1855ம் ஆண்டு முதல் 1920 வரையில் ரப்பர் கொண்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. இவை கருத்தடை மற்றும் நோய்தடுப்பு நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. பின் கடந்த 1980களில் எய்ட்ஸ் நோய் உலகளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தன. இதனால் எய்ட்ஸை (AIDS HIV) தவிர்க்க ஆணுறைகள் பயன்பாடு முக்கியத்துவம் பெற்றது. கடந்த 2000ம் ஆண்டு எய்ட்ஸ் ஹெல்த் கேர் அறக்கட்டளையின் சார்பில் உலகளவில் ஆணுறை தினம் மக்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. Train Coach Fire: இரயில் பெட்டியில் திடீர் தீ விபத்து; பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு.!
ஆணுறை பயன்பாடு அவசியம் எதற்கு? கடந்த 2009ம் ஆண்டு அமெரிக்காவில் பிப்ரவரி 13ம் தேதி ஆணுறை தினமாக கொண்டாடப்பட்டதை தொடர்ந்து, சர்வதேச ஆணுறை தினம் அங்கீகரிக்கப்பட்டு 31க்கும் அதிகமான நாடுகளில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. இன்றளவில் அவை ஒட்டுமொத்த உலகிலும் கடைபிடிக்கப்படுகிறது. உலகளவில் பல கலாச்சாரங்கள் இருந்தாலும், பாலியல் ஆரோக்கியம் மற்றும் ஆணுறை விஷயங்கள் விழிப்புணர்வின் மூலமாக எய்ட்ஸ் போன்ற தொற்றுகளில் இருந்து மக்களை காக்க உதவியது. எந்த விதமான ஐயமும் இன்றி ஆணுறைகளை வாங்கி துணையுடன் கூடும்போது பயன்படுத்துவதே தேவையற்ற கருவுருவாக்கம் போன்ற விஷயங்களையும் குறைக்க உதவும்.
பாலியல் நோய்களை தவிர்ப்பது நல்லது: உலக சுகாதார அமைப்பின் தகவல்படி, நாளொன்றுக்கு உலகளவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பாலியல் சார்ந்த தொற்றுகளால் பாதிக்கப்படுகின்றனர். இவற்றை ஆணுறை பயன்படுத்துவதன் வாயிலாக நேரடியாக தொற்றுகள் பரவுதலை தடுக்கலாம். அதேபோல, ஆண்டுக்கு ஒருமுறை உடல் பரிசோதனையும் அவசியம். பலரும் இன்றளவில் தாங்கள் விருப்பப்பட்ட நபர்களுடனும், பாலியல் தொழிலாளர்களுடனும் உடலுறவு வைக்கிறார்கள். அவர்கள் பாதுகாப்பு என்ற ஆணுறை கவசத்தை எடுத்துசெல்லாத பட்சத்தில் விபரீதம் நிச்சயம் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்..
வற்புறுத்தல் இல்லாத பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்ளுங்கள், மகிழ்ச்சியான வாழ்க்கையை தொடருங்கள்.!