Aadi Perukku 2024: மழையையும் மாரியம்மனையும் இணைக்கும் ஆடிப்பெருக்கு; 2024 ஆடிப்பெருக்கு நல்ல நேரம், வழிபாடு முறைகள் விபரம் இதோ.!
ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை.
ஜூலை 29, சென்னை (Chennai): Aadi Perukku 2024 Images & Wishes WhatsApp Status Messages, HD Wallpapers, Quotes and SMS To Share on Aadi Perukku:
ஆடி என்றாலே அம்மன் தான். ஆடியையும் அம்மனையும் பிரித்து விட முடியாது. ஏனெனில் ஆடி என்றாலே அனைத்து அம்மன் கோவில்களிலும் கூழ்தான். பொதுவாக ஆடி மாதத்திற்கு என்று பல நம்பிக்கைகள் உண்டு. ஆணும் பெண்ணும் சேரக்கூடாது, ஆடி மாதத்தில் எந்த ஒரு நல்லதும் ஆரம்பிக்கக் கூடாது போன்ற பல நம்பிக்கைகள் மக்களிடம் உண்டு.
ஆடிப்பெருக்கு: என்னதான் நல்ல காரியங்களை ஆரம்பிக்கக் கூடாது என்று கூறினாலும், ஆடி 18 நாளில், அதாவது அனைவராலும் ஆடிப்பெருக்கு (Aadi Perukku) என்று அழைக்கப்படும் அந்த பொன்னானில் திருமணத்தை கூட நடத்துவர். சுபமுகூர்த்த தினமாக இல்லாவிடினும் அந்த தினத்திற்கென்று மிகப்பெரிய விசேஷம் உண்டு. எந்த விதமான காரியமாக இருந்தாலும் அந்நாளில் தொடங்கினாலும் செல்வம் தழைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உண்டு. Aadi Memes: தொடங்கியது ஆடி மாதம்.. சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகும் கலக்கல் மீம்ஸ்.! கூழ் முதல் குமுறல் வரை..!
வரலாறு: இப்படிப்பட்ட ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. அதில் ஒன்றுதான் ஆற்றுப் பெருக்கு. பொதுவாக ஆடி மாதத்தில் தமிழகத்தில் தென்மேற்கு பருவம் (Aadi Monsoon Festival) நடைபெற்றுக் கொண்டிருக்கும். அதனால் மழையினால் ஆறுகளில் பெருக்கு ஏற்படும். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் விதை விதைப்பர். இப்போது நெல் கரும்பு முதலியவற்றை விதைத்தால் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். எனவே ஆடிப்பெருக்கில் பூஜைகள் செய்து உழவு வேலையை தொடங்குவார்கள்.
அதனை ஆற்றங்கரைகளில் உள்ள மக்கள் கூடி கண்டு களிப்பர். அப்போது கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். முன்னர் ஆடிப்பெருக்கில் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் பூஜை செய்வார்கள். என்னதான் தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு முக்கிய பண்டிகையாக கொண்டாடப்பட்டாலும், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை, பூம்புகார் ஆகிய மாவட்டங்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
முக்கியத்துவம்: ஆடி என்பது நீர் சக்திகளுடன் தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது. ஆடிப்பெருக்கில் இறைவனை வணங்குவதன் மூலம் தெய்வங்களை சாந்தப்படுத்துவதாக நம்புகின்றனர். மேலும் தீய சக்திகளில் இருந்து பாதுகாப்பை பெறவும் இந்த நாள் உறுதுணையாக இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். இந்த மாதத்தில் நீர்மட்டம் உயர தொடங்குவதால் விவசாயத்திற்கு நற்பயனாக உள்ளது. அதனால் நீர் நிலைகளுக்கு மரியாதை செலுத்துவதற்காகவும் ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது.
ஜோதிட முக்கியத்துவம்: ஆடி மாதத்தை ஆன்மீக மாதமாகவும் கருதுகின்றனர். இந்த மாதத்தில் சூரியன் கடக ராசிக்கு செல்வார். கடகம் என்பது சந்திரனுக்குரியது. சூரியனும் சந்திரனும் கூடி இருந்தால் அது அமாவாசை. சந்திரன் கூறிய வீட்டில் சூரியன் ஒரு மாதம் முழுவதும் இருப்பதால் இந்த மாதமே புனித மாதமாக ஜோதிடம் படி கணிக்கப்படுகிறது. அதனால்தான் ஆடி அமாவாசையை உயர்ந்ததாக போற்றுகின்றனர். அதுமட்டுமில்லாமல் குறிப்பாக கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய நீர்களை குறிக்கும் ராசிகள் இந்த மாதத்தில் குறிப்பாக ஆடி 18 அன்று வழிபாடு செய்தால், பல பலன்களை பெறலாம் என்று நம்பப்படுகிறது. Tamil Amman Movies List: தெய்வீகத்தன்மையை வளர்த்த ஆன்மிக திரைப்படங்கள்; முக்கியமான அம்மன் படங்கள் லிஸ்ட் இதோ.!
வழிபாடு முறைகள்: ஆடிப்பெருக்கென்று அனைவரும் அதிகாலையில் எழுந்த நீராடி வீட்டில் விளக்கேற்றி சுவாமியை வழிபட வேண்டும். பிறகு நீர்நிலைகளுக்கு சென்று அங்கே கரையில் தீபம் ஏற்றி வைத்து அவரவர் வழக்கப்படி வழிபாடு செய்யலாம். சில தீபம் ஏற்றி மங்களப் பொருள்களுடன் நதியின் மிதக்க விட்டு வணங்குவார்கள். மேலும் புதிதாக திருமணமான பெண்கள் ஆடிப்பெருக்கு நாளில் தாலி பிரித்து போடலாம். பல பெண்கள் நதிக்கரைக்கு சென்ற தாலிக்கயிறு மாற்றிக் கொள்வதும் உண்டு. இதனால் நித்திய சுமங்கலி பாக்கியம் கிட்டும் என்ற நம்பிக்கை உண்டு.
நல்ல நேரம்: சிறப்பு வாய்ந்த ஆடிப் பெருக்கு தினம் 2024ம் ஆண்டில் ஆகஸ்ட் 3ம் தேதி சனிக்கிழமையன்று வருகிறது. அன்று பிற்பகல் வரை புனர்பூசம் நட்சத்திரமும் பிறகு பூசம் நட்சத்திரமும் வருகிறது. அன்று காலை 7.45 முதல் 8.45 வரை மட்டுமே நல்ல நேரம் உள்ளது. மாலையில் 4.45 முதல் 5.45 வரை நல்ல நேரம் உள்ளது. எனவே காலை 9 மணிக்குள் வழிபாட்டினை முடிக்க வேண்டும் என சொல்லப்படுகிறது.