Astrology Prediction: உங்கள் ராசி, லக்னத்தின் குரு பொதுப் பலன்கள் எப்படி? 12 ராசிக்காரர்களில் யார் அந்த இலட்சாதிபதி?..
குருவின் பார்வையால் சகல செல்வாக்குடன் வாழும் இராசிக்காரர்கள் யார்? குரு பொதுப் பலன்கள் இதோ.!
அக்டோபர் 08, சென்னை (Astrology Tips): நவக்கிரங்களில் தலைமைக் கிரகமாக இருப்பவர் குருபகவான். குருவின் பார்வை இருந்தால் அது மனிதர்களின் வாழ்வில் உன்னதமான பலன்களை உண்டாக்கக்கூடும். மேலும் நவக்கிரகங்களில் எதிர்மறைப் பலன்களைக் கொண்டிருக்காத முழு சுபகிரகமாக குரு இருக்கிறது. ஒருவரின் ஜாதகத்தில் குரு பலம்பெற்று இருந்தால் அவரின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். குரு தனம், கல்வி, புத்திரம், பொருளாதாரநிலை, சுப நிகழ்ச்சி, புண்ணியம் போன்றவற்றிற்கு மூலமாக விளங்குகிறார். ஜாதகத்தில் எந்த கிரகம் வலுவிழந்து காணப்பட்டாலும், குரு மட்டும் வலுவிழக்கக் கூடாது என்று சொல்வதுண்டு. முக்கியமாக எந்த ஒரு ஜாதகத்திலும் லக்னத்தையோ, ராசியையோ, குறைந்தபட்சம் லக்னாதிபதியையோ குரு பார்த்தே தீருவார் அல்லது அதில் வலுப்பெற்று இருப்பார்.
மேஷம் (Aries):
மேஷ லக்னத்திற்கு குரு 9, 12-ம் அதிபதி, பாக்கியாதிபதி மற்றும் விரதியாதிபதியாக இருக்கிறார். ஜாதகத்தில் குரு பலம்பெற்றால் சகல சௌபாக்கியங்கள், புகழ், அந்தஸ்து பெற்று கௌரவத்துடன் வாழ்வார்கள். தந்தை வழிப் பூர்வீக சொத்து கிடைக்கும். கல்வி தொடர்பான தொழில்களில் ஈடுபடலாம். பிறருக்கு உதவி செய்து மகிழும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த ஜாதகரின் பெற்றோர்கள் நலமுடன் புண்ணியத்தை பெற்று இருப்பார்கள். தாய்-தந்தை வழியில் அதிக உறவினர்கள் இருப்பார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். சுய ஜாதகத்தில் குரு பலம் குறைந்து, பன்னிரண்டாமிடம் வலுப்பெற்றால் இவர்கள் பெரும்பாலும் சொந்த இடத்தை விட்டு வெளியூர் அல்லது வெளிநாட்டிற்கு சென்று வசிக்க நேரலாம். உங்களுடைய சொத்துகளை உறவினர்கள் பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். பரம்பரை சொத்துகளைத் தந்தைக்காக அல்லது தந்தையால் இழக்க நேரிடும் அல்லது வரவும் யோகமும் குறைந்துவிடும் . பொருளாதார ரீதியாக கஷ்டங்கள் ஏற்படும் மற்றும் மனக்கவலைகள் மற்றும் அளவுக்கு மீறிய மருத்துவச் செலவுகளும் ஏற்படும்.
பரிகாரம்: வியாழக்கிழமை திருச்செந்தூர் முருகனை வழிபடலாம். Indian Air Force Day 2024: இந்திய விமானப் படை தினம்.. வரலாறு என்ன தெரியுமா?!
ரிஷபம் (Taurus):
ரிஷப லக்னத்திற்கு குரு 8, 11-ம் அதிபதி. அஷ்டமாதிபதி மற்றும் லாபாதிபதியாக இருக்கிறார். அஷ்டமாதிபதியாக குரு வலுப்பெற்றால் சிலருக்கு அதிர்ஷ்டமாக லாட்டரி, உயில் சொத்துகள் மற்றும் நீண்ட நாள் இழுவையில் இருந்த நிதிகள் போன்றவை கிடைக்கூடும். அஷ்டமாதிபதியாக உள்ள குரு அசுப வலுப்பெற்றால் விபத்து, கண்டம், அறுவைச்சிகிச்சை, தீராத கடன், அவமானம் ஆகியவை ஏற்படக்கூடும். பெண்களுக்கு கடுமையான மாங்கல்ய தோஷம் உண்டாக்கும். சிலருக்கு காலதாமதமாக திருமணம் நடைபெறலாம். அல்லது திருமணத்திற்கு பிறகான வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரலாம். லாபாதியாக குரு சுப வலுப்பெற்றால் செய்த தவறுகளில் இருந்து தப்பிக்க வாய்ப்புள்ளது. எடுத்த முயற்சிகள் அனைத்தும் கைகூடும். நிலுவையில் உள்ள வழக்குகளில் வெற்றிகள் உண்டாகும். பொருளாதாரத்தில் உச்ச நிலையை அடைவீர்கள். கடன்களை மொத்தமாக அடைத்து நம்பிக்கைக்குரியவர்களாக மாறுவீர்கள்.
பரிகாரம்: வியாழக் கிழமை சுக்கிர ஓரையில் லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும்.
மிதுனம் (Gemini):
மிதுன லக்னத்திற்கு குரு 7, 10- ம் அதிபதி. களத்திற ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானம் என்ற இரு கேந்திரங்களுக்கும் அதிபதியாக இருப்பதால் கேந்திராதிபத்திய தோஷமுண்டு. உபய லக்னம் என்பதால் பாதகாதிபத்திய தோஷமும் ஏற்படும். 7- ம் அதிபதியாகி குரு சுப பலம் பெற்றால் வாழ்க்கைத் துணை, நண்பர்கள், தொழில் பார்ட்னர்கள், வாடிக்கையாளர்கள் என எதோவொரு பக்கத்தில் இருந்து உதவி கிடைக்கும். 10- ஆமதிபதியாக குரு பலம் பெற்றால் தொழிலில் உயர்வு உண்டு. மேலும் தொடர்ந்து நிலையான வருமானம் கிடைக்கும். அசுப பலம்பெற்றால் கஷ்டங்களும், பாதகங்களும் சிறிது அதிகமாகக் காணப்படும். கூட்டுத் தொழிலில் பிரிவினை, தம்பதிகள் விவாகரத்து, நண்பர்கள் மூலம் பிரச்சனை, புதிதாக வழக்கு உருவாவது, குடும்பத்தில் கருத்து வேறுபாடு போன்றவை ஏற்படலாம்.
பரிகாரம்: வியாழக்கிழமை ஸ்ரீ ராமானுஜரை வழிபட நன்மைகள் கிடைக்கும்.
கடகம் (Cancer):
கடக லக்னத்திற்கு குரு 6,9-ம் அதிபதி. ருண, ரோக, சத்ரு ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானாதிபதியாக இருக்கிறார். லக்னத்தில் குரு உச்சம்பெற்றாலும் தனுசில் ஆட்சிபெற்றாலும் கடன் பிரச்சனைகள் கதவைத் தட்டும். குருவுக்கு சனி, கேது பார்வையிருந்தால் கடன் தீராது. தனித்த குருவாக இருந்தால் கடனை பற்றி கவலைப்படத் தேவையில்லை. ஏதாவதொரு வழியில் கிடைக்கும் பணத்தை வைத்து கடன்களை சமாளித்து விடலாம். குருவுக்கு சனி, கேது பார்வையிருக்கும் கடன் ஜாதகரை உருத்தெரியாமல் ஆக்கிவிடும். குரு மற்றும் கேது திசைக் காலங்களில் மிகுந்த கவனம் தேவை. குருவே பாக்கியாதிபதி என்பதால் முன்னோர்களின் நல்லாசியும் கிடைக்கும். மேலும் இவர்களுக்கு பிறவிக் கடனும், பொருள் கடனும் தொடர்கதையாகவே இருக்கும்.
பரிகாரம் : வியாழக்கிழமை சந்திர ஓரையில் திருப்பதி வெங்கடாசலபதியை வணங்க வேண்டும்.
சிம்மம் (Leo):
சிம்ம லக்னத்திற்கு குரு 5,8-ம் அதிபதி. பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி மற்றும் அஷ்டமாதிபதியாக இருக்கிறார். குருவும் 5, 8-ம் இடமும் பலம்பெற்றால் பிள்ளைகளால் பெருமையும், பாராட்டுகளும் கிடைக்கும். மந்திர உபதேசம், குருவின் நல்லாசிகள் கிடைக்கும். நீண்ட கால திட்டங்கள் நிறைவேறும். பங்குச் சந்தை, உயில் சொத்து, லாட்டரி போன்ற அதிர்ஷ்ட வருமானங்களும் கிடைக்கும். குருவும் 5,8-ம் இடமும் பலம் குறைந்தால் கற்றுக் கொண்ட வித்தைகள் பலன் தராது. பங்குச்சந்தை வணிகத்தில் அதிக இழப்பை சந்திப்பார்கள். சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்த திருமணம் நடக்கும். பெண்களுக்கு கணவருடன் தீராத பிரச்சனை ஏற்படும், கடன் தொல்லை தாங்க முடியாத அளவுக்கு இருக்கும். சிலருக்கு செய்யாத குற்றத்திற்கு அவப்பெயர்கள் உண்டாகும்.
பரிகாரம்: வியாழக்கிழமை சூரிய ஓரையில் சிவ வழிபாடு செய்ய வேண்டும். Navratri Festival 2024: நவராத்திரி 2024; ஆறாம் நாள் வழிபாட்டு முறைகள் மற்றும் சிறப்புகள் பற்றிய முழு விவரம் இதோ..!
கன்னி (Virgo):
கன்னி லக்னத்திற்கு குரு 4, 7- ம் அதிபதி, சுக ஸ்தானம், களத்திர ஸ்தானாதிபதி, பாதகாதிபதி, மாரகாதிபதியாக இருக்கிறார். சுய ஜாதகத்தில் குருவும் 4,7ம் இடமும் பலம்பெறும் போது அசையும், அசையாச் சொத்துகளின் சேர்க்கை நல்ல நிலையிலிருக்கும். பிள்ளைகள் படிப்பில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். தாய், தாய்வழி உறவுகளின் அன்பும், ஆதரவும் நிறைந்திருக்கும். நல்ல வாழ்க்கைத் துணை அமையும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யமும், நல்லுறவும் நிறைந்திருக்கும். குருவும் 4,7ம் இடமும் அசுப பலம்பெற்றால் ஒன்றுக்கு மேற்பட்ட திருமண வாழ்க்கையை தருகிறது. திருமண வாழ்க்கையில் பாதகத்தையும், கஷ்டங்களையும் ஏற்படுத்தும் .பாதகாதிபதி மற்றும் மாரகாதிபதியாக வரும் கிரகங்களில் திசைக் காலங்களில் எதிர்பாராத தண்டனையைக் கொடுத்துவிடும், உபய லக்னம் என்பதால் பிரச்சனையின் தீவிரத்தை உணரும் முன்பு தண்டனையே கிடைத்துவிடும்.
பரிகாரம்: வியாழக்கிழமை புதன் ஓரையில் சக்கரத்தாழ்வாரை வழிபட வேண்டும்.
துலாம் (Libra):
துலாம் லக்னத்திற்கு குரு 3,6- ம் அதிபதி. சகாய ஸ்தானம் மற்றும் ருண , ரோக , சத்ரு ஸ்தானாதிபதியாக இருக்கிறார். சுய ஜாதகத்தில் 3-ம் இடமும் குருவும் பலம் பெற்றால் ஆன்லைன் வர்த்தகம் நல்ல பொருளாதார முன்னேற்றத்தைத் தரும். அதேபோல் ஊடகம், தகவல் தொடர்புத் துறையில் பணிபுரிபவர்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும். உடன்பிறந்தவர்களிடம் இருந்து அன்பும், உதவியும் கிடைக்கும். திட்டமிட்டு செயல்படவேண்டும். 6-ம் இடமும் குருவும் பலம்பெற்றால் சிறு தொழிலில் இருப்பவர்களும், முதலீடில்லாத கமிஷன் அடிப்படைத் தொழில் செய்யும் போதும் நல்ல மாற்றமும் சுப யோகமும் உண்டாகிறது. அதிக முதலிட்டில் சொந்தத் தொழில் செய்யும் துலா லக்னத்தினர் தொழிலால் கடனாளியாகிறார்கள். சிலர் ஜாமின் பிரச்சனையில் மாட்டுகிறார்கள்.
உறவினர்களால் பிரச்சனைகள் ஏற்படலாம்.
பரிகாரம்: வியாழக்கிழமை சுக்கிர ஓரையில் மகாலட்சுமியை வழிபட வேண்டும்.
விருச்சிகம் (Scorpius):
விருச்சிக லக்னத்திற்கு குரு 2,5- ம் அதிபதி மற்றும் தனாதிபதி, பஞ்சமாதிபதி, பூர்வ புண்ணியாதிபதியாக இருக்கிறார். சுய ஜாதகத்தில் குரு பலம்பெற்றால் புண்ணியமும், மாபெரும் அதிர்ஷ்டமும் கிடைக்கும். உங்களுக்கு குலதெய்வ அனுக்கிரகம் உண்டு. பிள்ளைகளால் பெற்றோருக்கும், பெற்றோர்களால் பிள்ளைகளுக்கும் முன்னேற்றம் உண்டு. உயர் கல்வி படிக்க விரும்புவோருக்கு நல்ல யோகமுண்டு. நீதித்துறை, ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியில் இருப்பவர்களுக்கு பலன்கள் இரட்டிப்பாகும். தொடர்ச்சியான வருமானம் கிடைக்கும். குரு பலம் குறைந்தால் நிலையான வருமானம் இருக்காது. தங்க நகை சேர்க்கை குறையும், பிள்ளைகளால் மனக்கஷ்டம் உண்டாகும். அதிர்ஷ்டம் குறைவுபடும்.
பரிகாரம் : வியாழக் கிழமை நவகிரக குருபகவானை வழிபட வேண்டும்.
தனுசு (Sagittarius):
தனுசு லக்னத்திற்கு குரு 1,4- ம் அதிபதி. லக்னாதிபதி, கேந்திராதிபதியாக இருக்கிறார். சுய ஜாதகத்தில் குரு பலம்பெற்றால் நிச்சயம் வீடு, மனை வாங்கும் யோகம் சித்திக்கும். பொருளாதார நிலை உயரும். தாய்வழிப் பூர்வீகச் சொத்து கிடைக்கக்கூடும். சுய உழைப்பால் சொத்துக்கள் வாங்கும் அதிர்ஷ்டமும் கிடைக்கும். கல்வி தொடர்பான தொழிலில் ஈடுபடுவது நல்லது. தாயார் உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவராக இருப்பார்கள். தாய்- தந்தை வழியில் அதிக உறவினர்கள் இருப்பார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். குரு பலம் குறைந்தால் சொத்துகளால் பயனிருக்காது. படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகும், உடல்நல பாதிப்பிருக்கும். குரு கேந்திராதிபதி என்பதால் திசை காலங்களில் உறவினர்களுடன் தேவையற்ற மனக்கசப்புண்டாகும். சுகபோகங்களையும், யோகங்களையும் அனுபவிக்கும் பாக்கியம் குறைவுபடும்.
பரிகாரம் : வியாழக்கிழமை குரு ஓரையில் பஞ்சமுக கணபதியை வழிபட வேண்டும். karaikudi Nandu Masala Recipe: காரைக்குடி ஸ்பெஷல் நண்டு மசாலா சுவையாக செய்வது எப்படி..?
மகரம் (Capricornus):
மகர லக்னத்திற்கு குரு 3, 12-ம் அதிபதி. சகாய ஸ்தானதிபதி, விரயாதிபதியாக இருக்கிறார். 3-ம் இடத்தில் குரு பலம்பெறும் போது லட்சியங்கள் நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். 12ம் இடமும் வலுப்பெற்றால் வெளிநாட்டு போகும் வாய்ப்பு அமையும். உடன்பிறந்தவர்களுக்காக சொத்து, சுகத்தை விட்டுக் கொடுத்து வாழ்வார்கள். ஆவணங்கள் தொடர்பான பிரச்சனை இருக்கும். பக்கத்தில் இருப்பவர்களிடம் எல்லைத் தகராறு இருக்கும். ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக ஏமாற்றத்தை சந்திப்பார்கள். தொழிலில் வேலையாட்களில் மூலம் இழப்பிருக்கும்.
பரிகாரம் : வியாழக்கிமை சனி ஓரையில் சிவ வழிபாடு செய்ய வேண்டும்.
கும்பம் (Aquarius):
கும்ப லக்னத்திற்கு 2,11 ம் அதிபதி. தன, லாபாதிபதியாக இவர்களுக்கு குரு அதிகப்படியான யோகத்தை வழங்குவார். சுய ஜாதகத்தில் குரு பலம்பெற்றால் செல்வாக்கு நிறைந்தவர்கள் தனது பேச்சுத் திறமையை பயன்படுத்தியே முன்னேற்றம் காண்பர். லாபமில்லாத செயல்களில் ஈடுபடவேண்டாம். அலுவலகத்தில் உயர் பதவிக்கு நிகரான பதவி கிடைக்க வாய்ப்புண்டு. வீடு, வாகனம் என சகலமும் கிடைக்கும். இரண்டாவது திருமணத்திற்கும் வாய்ப்புண்டு. வட்டித் தொழிலில் லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் நன்மை உண்டாகும். குரு பலம் குறைந்தால் ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை குறையும். புகழ், அந்தஸ்து, கௌரவம் குறைவாகும். தனக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் தவறிப்போகும்.
பரிகாரம்: வியாழக்கிழமை கோவில் யானைக்கு கரும்பு, பழங்கள் போண்ற இயன்ற உணவு தானம் வழங்க மகத்தான வாழ்வுண்டு.
மீனம் (Pisces):
மீன லக்னத்திற்கு குரு 1, 10-ம் அதிபதி. லக்னாதிபதி, பத்தாமதிபதியாக இருக்கிறார். சுய ஜாதகத்தில் குரு பலம்பெற்றால் அற்புதமான உன்னத பலன்களை அனுபவிக்கிறார்கள். நிலையான நிரந்திரமான தொழில், அரசு உத்தியோகம், அரசியல் பதவி மற்றும் அரசு வகை ஆதாயமுண்டு. புகழ், அந்தஸ்து, கௌரவம் என ஒரு மனிதன் வாழ்நாளில் அனுபவிக்க வேண்டிய அனைத்தும் தேடிவரும். குரு பலம் குறைந்தால் லக்னாதிபதி என்பதால் எளிதில் கண் திருஷ்டி தோஷம், அவமானம், போன்றவை தொடர்ந்து ஏற்படக்கூடும். குரு கேந்திராதிபதி என்பதால் வருமானத்தில் பிரச்சனை, கொடுக்கல்-வாங்கலில் நட்டம், தொழில் இழப்பு போன்றவை நிகழ வாய்ப்புள்ளது
பரிகாரம் : வியாழக்கிழமை குபேர லட்சுமி பூஜை செய்ய வேண்டும்.