அக்டோபர் 08, சென்னை (Special Day): இந்திய விமானப் படை தினம் (Indian Air Force Day) ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், ஐஏஎஃப் (IAF) அதிகாரிகளின் துணிச்சல், அர்ப்பணிப்பு உள்ளிட்டவற்றைக் கௌரவிக்கும் விதமாக, IAF அணி வகுப்பு நிகழ்ச்சி பல்வேறு இடங்களில் நடைபெறும். அதன்படி இந்திய விமானப்படையின் 92ஆம் ஆண்டு நிறைவு தினத்தைக் கொண்டாடும் விதமாக, சென்னை மெரினா கடற்கரையில் அக்.6 ஆம் தேதி விமான சாகச நிகழ்ச்சி மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. Navratri Festival 2024: நவராத்திரி 2024; ஆறாம் நாள் வழிபாட்டு முறைகள் மற்றும் சிறப்புகள் பற்றிய முழு விவரம் இதோ..!
வரலாறு: 1932 ஆம் ஆண்டில் இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) நிறுவப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் இந்திய விமானப் படை தினம் (Indian Air Force Day) அக்டோபர் மாதம் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது 1932 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் ராயல் விமானப்படையின் துணைப் படையாக இந்திய விமானப்படை உயர்த்தப்பட்ட தேதியாகும். இந்த நாள் இந்திய விமானப்படையின் வலிமை மற்றும் காலப்போக்கில் பணியாளர்கள் செய்த தியாகங்களை பாராட்டுவதற்காக கொண்டாடப்படுவதாகும். இந்த நாள் முழு தேசத்தையும் ஒன்றிணைத்து, விமானப்படையின் வரலாற்றையும் அதன் பயணத்தையும் நினைவூட்டுகிறது.
இந்திய விமானப் படை தினம்:
'नभः स्पृशं दीप्तम्'
Saluting the Guardians of skies on 92nd Indian Air Force Day.#IndianAirForce #AirForceDay2024 pic.twitter.com/eA8StWDY9H
— Defence Squad (@Defence_Squad_) October 8, 2024