Navratri 2024 (Photo Credit: Team LatestLY)

அக்டோபர் 07, சென்னை (Festival News): நவராத்திரி பூஜையின் (Navaratri) மிகவும் சிறப்புக்குரிய நாட்களில் ஒன்று ஆறாம் நாள் வழிபாடும் ஆகும். நவராத்திரியின் முழு பலனையும் பெறுவதற்கான நாளாகவும், அம்பிகையை நம்முடைய வீட்டிற்கே வரவழைத்து, அம்பாளின் (Ambal) ஆசியை பெறுவதற்கான மிகச் சிறந்த பூஜை செய்வதற்கான சிறப்பு நாளாகும்.

நவராத்திரி வழிபாடு:

நவராத்திரி விழாவில் (Navaratri Festival) மகாலட்சுமியை வழிபடுவதற்குரிய நிறைவு நாளே நவராத்திரியின் ஆறாம் நாளாகும். இதனைத்தொடர்ந்து வரும் மூன்று நாட்களும் ஞானத்தை அருளும் சரஸ்வதி தேவிக்குரிய வழிபாட்டு நாட்களாகும். அதனால் நவராத்திரியின் 6-ஆம் நாள் என்பது மகாலட்சுமியிடம் (Mahalakshmi), நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களையும் பெறுவதற்குரிய மிக முக்கியமான நாளாகும். இந்த ஆண்டு நவராத்திரியின் 6-ஆம் நாள் என்பது கூடுதல் சிறப்புடையதாகும். World Cotton Day 2024: உலக பருத்தி தினம்.. பருத்தி ஆடைகளை பராமரிப்பதற்காக உங்களுக்கான சில டிப்ஸ் இதோ..!

நவராத்திரி 2024 ஆறாம் நாள்:

இந்த 2024-ஆம் ஆண்டு நவராத்திரியின் 6-ஆம் நாள் அக்டோபர் 08-ஆம் தேதி வருகிறது. பொதுவாக ஆறு என்பது ஆறுமுகக் கடவுளான முருகப் பெருமானுக்குரிய (Lord Muruga) விசேஷமான எண்ணாகும். அதிலும், இந்த ஆண்டின் நவராத்திரியின் 6-ஆம் நாள் முருகப் பெருமானின் வழிபாட்டிற்குரிய செவ்வாய் கிழமையும், வளர்பிறை சஷ்டியும் இணைந்து வரும் நாளாக அமைகிறது. இது, மேலும் விசேஷமான ஒன்றாகும். செவ்வாய் கிழமை என்பது பக்தர்களின் துன்பங்கள் தீர்க்கும் துர்க்கைக்கும் உரிய நாளாகும்.

ஆறாம் நாள் சிறப்பு:

நவராத்திரியின் (Navratri 2024) 6-ஆம் நாளில் அம்பிகையை 7 வயது குழந்தையாக பாவித்து வழிபடுவது வழக்கம். ஆறாம் நாளுக்குரிய சண்டிகா தேவி குழந்தை வடிவானவள் என சொல்லப்படுகின்றது. அதனால் நவராத்திரியின் 6-ஆம் நாளில் கன்னிகா பூஜை செய்வதற்கான மிகச் சிறந்த நாளாகும். 7 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து, அவர்களை அம்பாளாக பாவித்து, அவர்களுக்கு நழுங்கிட்டு, பாத பூஜை செய்து, மங்கள பொருட்கள் வழங்கி, பிரியமான இனிப்புகள் மற்றும் உடைகளை வாங்கிக் கொடுக்க வேண்டும். இப்படி செய்வதால் குழந்தைகளின் யாராவது ஒருவரின் வடிவில் வந்து அம்பிகை நம்முடைய பூஜையை ஏற்று, நமக்கு அனைத்து நற்பலன்களையும் வழங்குவாள் என்பது நம்பிக்கை ஆகும்.

வழிபாட்டு முறை:

அம்பிகையின் வடிவம் - சண்டிகா தேவி

கோலம் - தேவியின் நாமம் கோலம் (கடலை மாவு)

மலர் - செம்பருத்தி

இலை - சந்தன இலை

நைவேத்தியம் - தேங்காய் சாதம்

சுண்டல் - பச்சைப் பயிறு சுண்டல்

பழம் - ஆரஞ்சு

நிறம் - கிளிப்பச்சை

ராகம் - நீலாம்பரி