Aadi Amavasai 2024: ஆடி அமாவாசை 2024.. படையில் போடுவதற்கு ஏற்ற நல்ல நேரம்.. காகத்திற்கு உணவு கொடுப்பதன் பலன்..!

இந்த நாளில் நம்மை காண்பதற்காகவும், நாம் செய்யும் வழிபாடுகளால் நம்முடைய முன்னோர்கள் நம்முடைய வீடு தேடி வருவதாக ஐதீகம்.

Aadi Amavasai (Photo Credit: Wikipedia)

ஆகஸ்ட் 02, சென்னை (Festival News): Aadi Amavasai 2024 Images & Wishes WhatsApp Status Messages, HD Wallpapers, Quotes and SMS To Share on Aadi Amavasai:

ஆடி என்றாலே அம்மன் தான். ஆடியையும் அம்மனையும் பிரித்து விட முடியாது. ஏனெனில் ஆடி என்றாலே அனைத்து அம்மன் கோவில்களிலும் கூழ்தான். பொதுவாக ஆடி மாதத்திற்கு என்று பல நம்பிக்கைகள் உண்டு. ஆணும் பெண்ணும் சேரக்கூடாது, ஆடி மாதத்தில் எந்த ஒரு நல்லதும் ஆரம்பிக்கக் கூடாது போன்ற பல நம்பிக்கைகள் மக்களிடம் உண்டு.

ஆடி அமாவாசை: என்னதான் நல்ல காரியங்களை ஆரம்பிக்கக் கூடாது என்று கூறினாலும், ஆடி அமாவாசை நாளில், அனைவரும் முன்னோர்க்கு வழிபாடு செய்வர். ஆடி அமாவாசை நாளில் நீர் நிலைகளில் நீராடி ஆலயங்களில் வழிபாடு, சிறப்பு பூஜைகள் செய்து, அன்னதானம் செய்தால் நாம் செய்த பாவங்கள், அனைத்தும் நம்மை விட்டு விலகும் என்று கூறுவார்கள். மேலும் இந்நாளில் நம்மைப் பாதுகாக்கவும், நமக்கு அனைத்து நன்மைகளையும் தந்து ஆசீர்வதிக்கவும் நம்முடைய முன்னோர்கள் ஆடி மாதம் முதல் தேதியன்று பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு வரத் தொடங்குவார்கள் என்பது ஐதீகம்.

தர்ப்பண சிறப்புகள்: ஆடி மாத அமாவாசை முன்னோர்களை தவறாமல் வழிபட வேண்டிய நாளாகும். ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு நாம் கொடுக்கும் தர்ப்பணம், திதி ஆகியவை நமக்கு முந்தைய 41 தலைமுறையினரையும் சென்றடையும். நம்முடைய முன்னோர்களுக்க மோட்சம் கிடைக்கும். நமக்கும் நம்முடைய சந்ததிக்கும் அனைத்து விதமான நன்மைகள் கிடைக்கும். Aadi Perukku 2024: ஆடிப்பெருக்கு 2024 வழிபாட்டு முறைகள் என்னென்ன..? அதன் சிறப்புகள் பற்றிய விவரம் இதோ..!

காகத்திற்கு உணவு: அமாவாசை வழிப்பாட்டில் காகத்துக்கு சாதம் வைத்து அது சாப்பிட்டப் பின்னரே உணவருந்தும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. காகத்துக்கு சாதம் வைத்தால், எமலோகத்தில் வாழும் நமது முன்னோர்கள் மகிழ்ச்சியுடன் நமக்கு ஆசி வழங்குவார்கள். எனவேதான் அமாவாசை நாளில் நாம் காகங்களுக்கு உணவு அளிக்கிறோம்.

நல்ல நேரம்: ஆடி அமாவாசை அன்று காலை 6 மணி முதல் 11.55 மணி வரையிலான நேரத்தில் தர்ப்பணம் கொடுத்து, முன்னோர்களை வழிபடலாம். இந்த ஆண்டு ஆடி அமாவாசை ஞாயிற்றுக்கிழமை வருவதால் அன்றைய தினம் பகல் 12 மணி முதல் 01.30 மணி வரையிலான நேரம் எமகண்ட நேரமாகும். அதனால் அதற்கு முன்பாக முன்னோர் வழிபாட்டினை நிறைவு செய்வது சிறப்பானதாகும்.