ஆகஸ்ட் 11, சென்னை (Festival News): அம்மனின் அருளை நேரடியாகப் பெற்றுத் தரும் ஆடி மாத விரத வழிபாட்டில் தெய்வீகத்தன்மை எப்போதும் மறக்க முடியாத வகையில் இருக்கும். 2025 ஆம் ஆண்டுக்கான ஆடி மாதம் ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அடுத்து வரும் ஒரு வாரத்திற்குள் கண் திருஷ்டி நீங்கவும், அடிக்கடி ஏற்படும் நோய் தொற்றுகளை சரி செய்யவும், பண நெருக்கடியை குறைக்கவும், தெய்வங்களின் அருள் கிடைக்கவும் ஆடி அம்மன் வழிபாட்டை கடைபிடிக்கலாம். Independence Day Speech: சுதந்திர தினம் பேச்சு போட்டி.. உங்களுக்கான சிறப்பு கட்டுரை இங்கே.!
துன்பங்கள் நீங்க குலதெய்வ வழிபாடு :
அதேபோல குலதெய்வ வழிபாட்டையும் மேற்கொள்ளலாம். இது குடும்பத்துக்கு நன்மையை தரும். ஆடி மாதத்தில் குலதெய்வ கோயிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபடுவது குடும்பத்தின் வளர்ச்சிக்கு உதவும். குலதெய்வம் கோயிலுக்கு சென்று அன்னதானம் செய்வது கூடுதல் சிறப்பை தரும். ஆடி மாதத்தில் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வதால் துன்பங்கள் கரைந்து ஓடும் என்பது ஐதீகம்.
ஆடி கடைசி வாரம் வழிபாடு :
கோயிலில் செய்யும் சிறிய தானமும் குடும்பத்தின் வளர்ச்சிக்கு மாற்றத்தை ஏற்படுத்தும். அதன்படி அடுத்து வரும் ஒரு வாரத்திற்குள் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுவது மிகவும் சிறப்பானது. பூ, மாலை, பழம் வாங்கிச்சென்று வழிபடவில்லை என்றாலும், வெற்றிலை, பாக்கு வைத்து நம் குலதெய்வத்தை மனமுருகி வழிபட்டால் குடும்பத்திற்கு சுபிட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.