செப்டம்பர் 21, சென்னை (Festival News): புரட்டாசி மாதத்தில் கடைபிடிக்கப்படும் மகாளய அமாவாசை முன்னோர்கள் வழிபாட்டுக்கு முக்கியத்துவமானதாக கருதப்படுகிறது. பிற மாதங்களில் அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும் நிலையில், புரட்டாசி மாதத்தின் அமாவாசைக்கு 15 நாட்களுக்கு முன்னர் கொடுக்கப்படும் தர்ப்பணம் முன்னோர்களின் நல்லாட்சியைப் பெற சிறந்த காலமாக கருதப்படுகிறது. முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடையாமல் இருக்கும் பட்சத்தில் மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால் தலைமுறை தாண்டி நன்மைகள் கிடைக்கும் என சாஸ்திரங்களும் சொல்கின்றன. Purattasi 2025: புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?.. ஆரோக்கியம் & ஆன்மீக காரணங்கள்..!
மஹாளய அமாவாசை வழிபாடு முறைகள் :
மகாளய பட்சத்தில் தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் மகாளய அமாவாசை அன்று தவறாமல் தர்ப்பணம் (Pitru Tarpanam) கொடுக்கலாம். வெளிநாட்டில் இருப்பவர்கள், வெளியூர்களில் இருப்பவர்கள் நீர்நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுத்தும் வழிபடலாம். வீட்டிலேயே வழிபாடு செய்யும் நபர்களுக்கான எளிய வழிமுறை குறித்து காணலாம். சூரிய உதயம் கண்டதும் குளித்துவிட்டு முன்னோர்களை மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். வீட்டில் தர்ப்பணம் கொடுக்க தாம்பூலம் வைத்து கருப்பு எள் வைத்து நீர் ஊற்றி முன்னோர்களுக்கு வழிபாடு (Amavasya Fasting) செய்ய வேண்டும். அவர்களின் பெயரைச் சொல்லி மூன்று முறை நீர் விடவும். இந்த நீரை கால் படாத இடத்தில் ஆறு, குளம், ஏரி, கிணறு போன்ற இடங்களில் ஊற்றலாம்.
விரதம் இருக்கும் முறை :
இந்த வழிபாடுகளை மனதில் நிறுத்தி செய்வது நல்லது. தெற்கு பார்த்தபடி முன்னோர்களுக்கு அகல் விளக்கு வைத்து வழிபாடு செய்யலாம். துளசி மாலை அணிவித்து வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், மல்லிகை பூ வைத்து வழிபாடு நடத்த வேண்டும். சாதத்தில் தயிர், கருப்பு எள் கலந்து காக்கைக்கு கிழக்கு திசை பார்த்து வைத்து நீர் விடுவது நல்லது. பசுவுக்கு அகத்திக்கீரை, வாழைப்பழம் கொடுக்கலாம். தெரு நாய்களுக்கு உணவளிப்பதும், அன்னதானம் செய்வதும் கூடுதல் சிறப்பை தரும். மாலை 6 மணிக்கு மேல் கோவிலுக்கு சென்று நல்லெண்ணெய் தீபமிட்டு முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்யலாம். திருமணமாகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த தினத்தில் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. Solar Eclipse 2025: 2025ம் ஆண்டுக்கான சூரிய கிரகணம்.. இந்தியாவில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் இதோ.!
மகாளய அமாவாசையில் தர்ப்பணம் கொடுக்க உகந்த நேரம் :
இந்த நாளில் வெங்காயம், பூண்டு, முருங்கைக்காய், முள்ளங்கி போன்ற காய்கறிகளை தவிர்த்து சமையல் செய்து விரதம் இருந்து தர்ப்பணம் கொடுக்கலாம். இந்துமத புராணங்களின் நம்பிக்கைப்படி பல மகான்களும், அரசர்களும், அரிச்சந்திரன், ஸ்ரீராமர், தர்மர் போன்ற பலரும் மகாளய அமாவாசையில் வழிபாடு செய்து பலன்களை பெற்றதாகவும் கூறப்படுகின்றன. அந்த வகையில் மகாளய அமாவாசை நாளில் காலை 6:00 மணி முதல் மதியம் 1 மணி வரை தர்ப்பணம் கொடுக்கலாம். காலை 7 மணிக்கு முன்னர் செல்வது சிறப்பானதாகும். ராகு காலம், எமகண்டத்தை தவிர்க்கலாம்.