International Day of the Older Persons 2024: "முதுமையை மதிப்போம்.. முதியோர்களை அரவணைப்போம்" உலக முதியோர் தினம்.!

மூத்த குடிமக்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு, நலனைக் காக்க வேண்டியது நம் அனைவரது கடமை.

International Day of the Older Persons (Photo Credit: LatestLY)

அக்டோபர் 01, புதுடெல்லி (Special Day): சர்வதேச முதியோர் தினம் (International Day of the Older Persons) ஆண்டுதோறும் அக்டோபர் 1 அன்று கொண்டாடப்படுகிறது. மூத்த குடிமக்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு, நலனைக் காக்க வேண்டியது நம் அனைவரது கடமை. எனவே உலகில் உள்ள முதியவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கவும், அவர்களின் வாழ்க்கையை பாதிக்கும் பிரச்சனைகளை கண்டறிந்து அதனை தீர்ப்பதையும் இந்த நாள் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. International Coffee Day 2024: சர்வதேச காபி தினம்.. காபியில் இருக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா? வாங்க தெரிஞ்சிக்கலாம்..!

வரலாறு: 2030 ஆம் ஆண்டுக்குள் உலகின் முதியவர்களின் எண்ணிக்கை 46 சதவீதம் அதிகரிக்கும் என்று ஐநாவின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதாவது தற்போது 943 மில்லியனாக இருக்கும் உலக முதியவர்களின் எண்ணிக்கை 1.4 பில்லியனாக உயருமாம். இந்த முதியவர்களின் முக்கியத்துவத்தை போற்றும் விதமாக ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி உலக முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் ஐநா சபையால் இந்த தினம் உலகெங்கும் அறிவிக்கப்பட்டது.

முதுமையை மதிப்போம், முதியோர்களை அரவணைப்போம், மூத்த குடிமக்களாகிய அவர்கள் கெளரவமாக வாழ வழி வகுப்போம். முதுமையை உணர்ந்து செயல்படுவோம். நாளை நாமும் முதியவர்களாக மாறுவோம்.