International Mountain Day 2024: சர்வதேச மலைகள் தினம்.. இந்தியாவில் உள்ள ஏழு முக்கிய மலைத்தொடர்கள் என்னென்ன?!

மலைகள் மற்றும் அதன் பல்லுயிரியலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சர்வதேச மலை தினம் டிசம்பர் 11 அன்று அனுசரிக்கப்படுகிறது.

Mountain Day (Photo Credit: LatestLY)

டிசம்பர் 11, டெல்லி (Special Day): ஐநா சபையில் 2002 டிசம்பர் 11ம் நாள் சர்வதேச மலைகள் தினமாக (International Mountain Day) அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மனித நல வாழ்வில் மலைகள் வகிக்கும் பங்கின் முக்கியத்துவத்தைப் பற்றி விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தவும், அவற்றிலுள்ள வாழ்வாதார வாய்ப்புகள் மற்றும் மலைகளின் மேம்பாட்டிற்காகவும், உலகம் முழுவதும் மக்களிடையே நேர்மறையான மாற்றங்களையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதற்காகவே இத்தினம் கொண்டாடப்படுகின்றது.

இந்தியாவில் மொத்தம் ஏழு முக்கிய மலைத்தொடர்கள் உள்ளன.

இமய மலைத்தொடர்:

இதுதான் இந்தியாவின் இளமையான மலைத்தொடராகும். மேலும் இது உயரமான அதிக சிகரங்களைக் கொண்ட மலைத்தொடர் ஆகும். இம்மலை இரண்டு டெக்டானிக் தகடுகளின் மோதலால் உருவான இந்த மலையானது இளமையான மடிப்பு மலையாக கருதப்படுகிறது. பருவநிலை மற்றும் பிற நாட்டின் எதிரிகளிடமிருந்து நம் நாட்டை காப்பாற்றும் எல்லை மலையாகவும் இது விளங்குகிறது. Human Rights Day 2024: "இன்றைக்கு சுதந்திரம் இருக்கிறது.. உரிமைகள் தான் இல்லை.." உலக மனித உரிமை தினம்..!

காரகோரம் மற்றும் பிர் பாஞ்சல் மலைத்தொடர்:

காரகோரம் மலைத்தொடரானது 500 கிமீ நீளத்தில் உலகின் இரண்டாவது பெரிய சிகரமான கே2 உட்பட பல சிகரங்களைக் கொண்டுள்ளது. பிர்பஞ்ச தொடர் இமாசலப்பிரதேசத்தில் தொடங்கி வடமேற்காக ஜம்மு-காஷ்மீர் வரை பரவியுள்ளது.

கிழக்கு மலைத்தொடர் அல்லது பர்வன்சால் மலைத்தொடர்:

இது பார்க்க இமயமலையைப் போன்று இருந்தாலும் இமயமலையைப் போல் உயரமாகக் காணப்படுவதில்லை. இம்மலைத் தொடர் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், அருணாசலபிரதேசம், மணிப்பூர், திரிபுரா, நாகலாந்து, மேகாலயா மற்றும் மிசோரம் ஆகியவற்றில் அமைந்துள்ளது.

விந்திய சாத்பூரா மலைத்தொடர்:

வட இந்தியா தென்னிந்தியா என பிரிக்கும் இவை ஒன்றுக்கொன்று இணையாக அமைந்த மலைத் தொடர். விந்திய மலை தான் இந்தியாவின் மிகப் பழமையான மலையாகும்.

ஆரவல்லி மலைத்தொடர்:

உலகத்தில் உள்ள பழமையான மலைகளில் ஒன்றான ஆரவல்லி மலைத்தொடர் 10 மீ முதல் 100 மீ வரை அகலம் உடையது. பனாஸ், லூனி, சபர்மதி ஆகிய ஆறுகள் இம்மலையிலிருந்து வருகின்றன. கனிம வளங்களுக்கு புகழ்பெற்ற இம்மலைத்தொடரானது ஏராளமான உயிரினங்களுக்கு வாழிடமாக உள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்:

இந்த மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் குஜராத்தில் இருந்து கன்னியாகுமரி பரவி உள்ளது. இதில் 60% கர்நாடகாவில் அமைந்துள்ளது. கோதாவரி, கிருஷ்ணா, காவிரி போன்றவை இம்மலையில் காணப்படும் முக்கிய ஆறுகள்.

கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர்:

தொடர்ச்சியற்ற உயரம்குறைவான இம்மலைத்தொடர் மேற்குவங்காளம், ஒரிசா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய இடங்களில் பரவியுள்ளது.ஆந்திர மாநிலத்தில் 1690மீ உயரம் கொண்ட ஜிந்தகடா இம்மலையின் உயர்ந்த சிகரமாகும்.