Human Rights Day (Photo Credit: LatestLY)

டிசம்பர் 10, டெல்லி (Special Day): பூமியில் பிறந்த அனைத்து மனிதர்களும் சமம் தான். இங்கு உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என எவரும் இல்லை. அனைவரும் சமமானவர்கள் தான். மனிதனாய் பிறந்த அனைவருக்கும் சம உரிமையும் சுதந்திரமும் என்பது அவனது பிறப்புரிமை. அதில் எந்த விட ஏற்றத்தாழ்வும் வேறுபாடும் இருக்கக் கூடாது. இதற்கே உலக நாடுகள் அனைத்தும் முற்படுகின்றனர். இருந்தாலும் அடிமைத்தனாலும் சித்ரவதைக்கு பலர்சிக்குவதும் தொடர்ந்து நடந்து கொண்டே வருகிறது. இது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவே சர்வதேச மனித உரிமை தினம் (Human Rights Day) ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

மனித உரிமை:

அன்று ஜாதி, மதம், இனம் என்ற பெயரால் ஒவ்வொரு ஒருவரை தாக்கி ஏற்றத்தாழ்வினை உருவாக்கி மனித உரிமையினை பலர் அழித்தனர். இன்றைய டிஜிட்டல் காலத்திலும் அது தொடர தான் செய்கிறது. இன்றும் குடிநீர் தொட்டிகளில் மலத்தினை கலத்தல், அவன் வீட்டிற்கு போனால் சாப்பிடக்கூடாது, என பிரிவினைகளை ஊக்கப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றோம். இது இந்தியாவில் மட்டும் நடக்கவில்லை. உலக அளவிலும் இந்த மனித உரிமை மீறல் ஏற்படுகிறது. Astrology: 2025 ஆம் ஆண்டு உத்திரம் நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!

ரஷ்யா உக்ரைன், இஸ்ரேல் ஹமாஸ் என்ற போர்களில் மூலம் மனிதர்கள் தங்கும் இடத்தினை அழித்து அங்குள்ள மனிதர்கள் என்ன செய்வதென்றே அறியாத அவல நிலைக்குத் தள்ளுகின்றோம். ஐக்கிய நாடுகள் சபை கடந்த 1948 ஆம் ஆண்டு மனித உரிமை நிலை நாட்டுவதற்காக யூனிவர்சல் டிக்லரேஷன் ஆஃப் ஹியூமன் ரைட்ஸ் பேரறிக்கையை பிரகடனம் ஆக்கியது. இந்தியாவில் கடந்த 1993 ஆம் ஆண்டு மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. என்னதான் சட்டங்கள் இருந்தாலும் விவசாயிகளின் உரிமை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, தனிமனித சுதந்திரம் என அனைத்தும் உலக அளவிலும் கேள்விக்குறியாக தான் உள்ளது. இதனை சரி செய்ய வேண்டியது மனிதனின் கைகளிலேயே உள்ளது.