National Handloom Day 2024: தேசிய கைத்தறி தினம்.. வரலாறு என்ன தெரியுமா?!

நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர்களை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Handloom Day (Photo Credit: Team LatestLY)

ஆகஸ்ட் 07, புதுடெல்லி (New Delhi): இந்தியாவில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய கைத்தறி தினமாக (National Handloom Day) அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் இந்தியாவின் நெசவு பாரம்பரியத்தையும், அதனை உயிர்ப்புடன் வைத்திருப்பதன் முக்கியத்துவத்தையும் போற்ற கடைபிடிக்கப்படுகிறது. மேலும் நாட்டின் கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்திற்கு நிறைய பங்களிக்கும் நெசவாளர்களுக்கு மரியாதை செலுத்தவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. Hiroshima Day: ஹிரோஷிமா நினைவு தினம்.. மறக்க முடியாத வலி.. பேரழிவின் வரலாறு என்ன தெரியுமா?!

வரலாறு: இந்தியாவின் கைத்தறி நெசவாளர்களை கவுரவிக்கும் விதமாக முதன்முதலில் 2015 ஆம் ஆண்டு தேசிய கைத்தறி தினம் ஜவுளி அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. 1905ஆம் ஆண்டு நடந்த சுதேசி இயக்கத்தின் நினைவாக இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. சுதேசி இயக்கம் என்பது வெளிநாட்டு நிறுவனங்களால் இந்திய ஜவுளி விற்பனைக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிரான அமைதி போராட்டமாகும். இந்த இயக்கம் உள்நாட்டு துணிகளின் பயன்பாட்டில் எழுச்சியை உருவாக்கியது. இது கைத்தறி நெசவு தொழிலை இந்தியாவில் ஒரு முக்கியமான தொழிலாக வளர்க்க வழிவகுத்தது.