Periyar Birthday: "ஆயுதமும் காகிதமும் பூஜை செய்ய அல்ல.. புரட்சி செய்ய.." தந்தை பெரியார் பிறந்த தினம்..!

தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்தநாளான இன்று சமூக நீதி நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

Periyar (Photo Credit: LatestLY)

செப்டம்பர் 17, புதுடெல்லி (New Delhi): இந்திய நாட்டில் சுதந்திரத்திற்கான போர் உச்சத்தில் இருந்த தருணத்தில், தமிழ்நாடான மதராசபட்டினத்தில் பெண் அடிமைத் தனம், பெண்ணுரிமை, சமூக நீதி, கடவுள் மறுப்பு, அறிவியல் சிந்தனை, பகுத்தறிவு என ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். மொத்த நாடே ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்தின் கீழ் இருந்த மக்களுக்காக குரல் கொடுத்த போது, சாதியத்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் அடிமையாக நடத்தப்பட்டு இருந்த பெண்களுக்காகவும் குரல் எழுப்பியவர் அவர். அவர்தான் தந்தை பெரியார்.

பிறப்பு: 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் வெங்கட் நாயக்கர் மற்றும் சின்னதாயம்மையாருக்கு மகனாக பிறந்தவர் தான் ராமசாமி. பெரிய செல்வந்தர் வீட்டில் குடும்பத்தில் பிறந்த ராமசாமி தந்தையுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி வாரணாசி சென்றார். அங்கு அவர் கண்ட மனிதாபிமானமற்ற செயல்களே அவரை கடவுள் மறுப்பாளராக மாற்றியது. பின்னர் காந்தியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு காங்கிரசில் இணைந்த அவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக தீவிரமாக போராடினார். இதனால் சென்னை மாகாண காங்கிரஸ் தலைவர் பதவியும் அவருக்கு கிடைத்தது. World Patient Safety Day 2024: ஒவ்வொரு நாளும் கூடும் கர்ப்பிணி பெண்கள் மரணம்.. உலக நோயாளி பாதுகாப்பு தினம்.!

பெரியார்: தொடர்ந்து கல்வியிலும் அதிகாரத்திலும் உயர் ஜாதியினரை ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் என்று பிற்படுத்தப்பட்டோர்களுக்காக குரல் கொடுக்க ஆரம்பித்தார். அவரின் இட ஒதுக்கீடு போராட்டத்திற்கு சக காங்கிரஸ் கட்சியினரே  எதிராக நின்றதினால் தலைவர் பதவியை உதறி தள்ளிவிட்டு சுயமரியாதை இயக்கம் என்ற இயக்கத்தினை தொடங்கினார். தொடர்ந்து சமூக ஏற்றத்தாழ்வு, தீண்டாமை, மூடநம்பிக்கை, பார்ப்பனிய ஆதிக்கம் என்ன எல்லாவற்றிற்கும் எதிராக கேள்விகளை கேட்டார். அந்த வகையில் பெண்ணுரிமைக்காக ஒரு மாநாட்டை நடத்திய போது உரிமைக்காக போராடிய பெண்கள் ராமசாமியை பெரியார் என அழைத்தனர். பின்னாளில் அதுவே அவரது பெயராக பட்டித்தொட்டி எங்கும் பரவியது. அதுதான் "தந்தை பெரியார்".

1924 ஆம் ஆண்டு கேரளாவில் வைக்கம் என்ற இடத்தில் பெரியார் நடத்திய போராட்டத்தால்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கோயில் தெருக்கள் வழி விட்டன. தீண்டாமைக்கு எதிராக அவர் கொடுத்த குரல் தேசிய அளவில் கவனம் பெற்றது. 1929 செங்கல்பட்டில் நடந்த மாநாட்டில் தனது பெயரின் பின்னால் இருந்த ஜாதியை நீக்கினார். முன்னாள் முதலமைச்சர் ராஜாஜி உடன் நட்பாக இருந்தாலும் கூட தான் கொண்ட கொள்கைக்கு எதிராக அவர் செயல்படும் போது எதிர்ப்பதிலும் முதல் ஆளாக இருந்தார். 1937 இல் இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டத்திற்கு வழி வகுத்தார். 1939இல் நீதி கட்சியில் சேர்ந்த அதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் அதை திராவிடர் கழகமாக மாற்றினார். பின்னர் பல்வேறு பத்திரிகைகளை நடத்தி அதன் மூலம் அறிவொளி புகட்டினார்.

சாதி, மதம், வர்க்கம், பாலின பேதம், மொழி, ஆதிக்கம் என அனைத்தையும் எதிர்த்து சமத்துவத்திற்காக குரல் கொடுத்தார் பெரியார். ஜாதி மறுப்பு திருமணம், கலப்புத் திருமணம், விதவை திருமணம் என பலவற்றினை நடத்தி காட்டினார். தள்ளாடும் வயதிலும் அவரது கால்கள் தமிழ்நாடு முழுவதும் சுழன்று பகுத்தறிவு கருத்துகளை முழங்கின. சமூக நீதியிலும் சமத்துவத்திலும் பெண்கள் முன்னேற்றத்திலும் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டும் மாநிலமாக தமிழ்நாடு மாறியதற்கு பெரியார் எனும் பகுத்தறிவு பகலவனின் பங்கு அளவிட முடியாதது என்பதனை யாராலும் மறுக்க முடியாது. TVK Vijay Honour to Periyar: பகுத்தறிவு பகலவனின் பிறந்தநாள்: தந்தை பெரியார் சிலைக்கு த.வெ.க தலைவர் விஜய் மலர்மாலை வைத்து மரியாதை..!

பெரியாரின் பொன்மொழிகள்:

இதில் உள்ள கருத்துக்கள் எல்லாம் சிலரால் ஏற்றுக் கொள்ளாமல் போகலாம். ஆனால் ஏதேனும் ஒரு கருத்து உங்கள் இதயத்தை தொட்டது என்றால் அதுவே பெரியாரின் வெற்றி. இந்த வரிகளோடு நம் வாழ்வை உயர்த்த விரும்பிய பெரியாரை இந்த நன்நாளில் நினைவு கூர்வோம்.