World Patient Safety Day (Photo Credit: LatestLY)

செப்டம்பர் 17, புதுடெல்லி (Special Day): மருத்துவத்துறையின் ஒரு முக்கியமான அம்சமாக நோயாளியின் பாதுகாப்பு பார்க்கப்படுகிறது. நோயாளியின் உயிரைக் காப்பாற்றவே மருத்துவர்கள் போராடுகின்றனர். இருப்பினும் சில நேரங்களில் நோயாளிகள் சிகிச்சை பலனின்றி இறப்பதுண்டு. எனவே உலகளாவிய ரீதியில் நோயாளிகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், தனிநபர்கள் சுகாதாரப் பாதுகாப்பை பராமரிப்பதில் ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17ம் தேதி அன்று உலக நோயாளி பாதுகாப்பு தினம் (World Patient Safety Day) கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பு (World Health Organisation) மற்றும் அதன் சர்வதேச கூட்டமைப்புகளால் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

வரலாறு: கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற 72-வது உலக சுகாதார பேரவையில் “நோயாளி பாதுகாப்பு குறித்த உலகளாவிய நடவடிக்கை” (WHA72.6) என்ற தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அன்றைய தினத்தில் தான் உலக நோயாளி பாதுகாப்பு தினம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து ஆண்டுதோறும் செப்டம்பர் 17ம் தேதி இந்த நாளை கொண்டாடுவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது. 2016ம் ஆண்டில் லண்டனில் நோயாளி பாதுகாப்பு தினம் முதன் முதலில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து உலகளாவிய மந்திரி உச்சிமாநாடுகளின் வெற்றிகரமான தொடரின் ஒரு பகுதியாகவே உலக நோயாளி பாதுகாப்பு தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. Miladi Nabi 2024: "இஸ்லாமிய நண்பர்களுக்கு மிலாடி நபி வாழ்த்துக்கள்" புண்ணியத் தூதர் பிறந்த நாள் இன்று..!

முக்கியத்துவம்: WHO தரவுகளின்படி, தினமும் 810 பெண்கள் கர்ப்பம் மற்றும் பிரசவத்துடன் தொடர்புடைய தவிர்க்க முடியாத காரணங்களால் உயிரிழக்கின்றனர். மேலும், ஒவ்வொரு நாளும் சுமார் 6700 குழந்தைகள் இறக்கின்றனர். மொத்த இறப்பு விகிதங்களில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு 47 சதவிகிதம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 மில்லியன் குழந்தைகள் பிரசவத்தின் போது இறந்தபடியே பிறக்கின்றன. பிரசவத்தின் போது இதுபோன்ற நிகழ்வு 40% க்கும் அதிகமாக நடக்கின்றன. இதுபோன்ற பிரசவ இறப்புகள் தவிர்க்கப்பட வேண்டியது என்றும், மருத்துவப் பிழைகளால் ஏற்படும் தீங்கின் அளவை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு WHO அறிவுறுத்தியுள்ளது.

பிரசவத்தின்போது தேவையற்ற அபாயங்களை தவிர்க்க வேண்டும். மேலும் அனைத்துப் பெண்களுக்கும், பிறந்த குழந்தைகளுக்கும் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதோடு, பராமரிப்பு நேரத்தில் தரமான சேவைகளை வழங்குவதை ஆதரிப்பதும் இந்த நாளின் முக்கிய நோக்கமாகும். மேலும் பாதுகாப்பு முயற்சிகளை அதிகரிக்கவும், அணுக முடியாததை அடையவும், நோயாளிகளுக்கு பாதுகாப்பை வழங்கவும், அவசர மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை எடுக்க அனைத்து மருத்துவ கூட்டமைப்புகளுக்கும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.