World Ozone Day 2024: ஓசோன் அழிந்தால் என்ன நடக்கும்? இன்று உலக ஓசோன் தினம்.!

உலக ஓசோன் தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 16 அன்று அனுசரிக்கப்படுகிறது.

World Ozone Day (Photo Credit: LatestLY)

செப்டம்பர் 16, புதுடெல்லி (Special Day): பூமியின் மேற்பரப்பில் இருந்து 20- 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள `ஸ்ட்ராடோஸ்பியர்' என்ற அடுக்கில் அமைந்த பகுதி `ஓசோன் படலம்'. ஓசோன் வாயு 3 ஆக்சிஜன் மூலக்கூறுகளால் ஆனது. இது சூரியனில் இருந்து வெளிவரும் புற ஊதாக்கதிர்களை பூமிக்கு அனுப்பாமல் தடுக்கும் பணியை ஓசோன் படலம் செய்கிறது. புற ஊதாக்கதிர்கள் நேரடியாக பூமியில் விழுந்தால், அது மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் புற்றுநோய், கண் பார்வை குறைபாடு போன்ற பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

வரலாறு: ஓசோன் முதன்முதலில் கண்டறியப்பட்டது 1974-ல்தான். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆயவறிஞர்கள் பிராங் ஷெர்வுட் ரவ்லாந்து, மரியோ மோலினா வட துருவத்திலும் தென் துருவத்திலும் உள்ள ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்ததையும் அதனால் புற ஊதா கதிர்கள் மனித இனத்தை நேரடியாகத் தாக்கும் என்பதையும் கண்டறிந்தனர். பின்னர் 1987-ம் ஆண்டு முதல் சர்வதேச அளவில் உலக ஓசோன் தினம் (World Ozone Day) ஆண்டு தோறும் செப்டம்பர் 16-ம் தேதி அன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. Soil Fertility: மண் வளம் அவசியம்.. மண் வளத்தை மேம்படுத்துவது எப்படி? விவரம் உள்ளே..!

ஓசோன் சிதைவு: ஓசோன் படலம் சிதைவுக்கு பல காரணங்கள் உள்ளன. குப்பையில் இருந்து வரும் மீத்தேன் வாயு, வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் புகை, தேவையற்ற பொருட்களை மண்ணில் போட்டு எரிப்பதால் வெளிவரும் புகை போன்ற வாயுக்கள் ஓசோன் படலத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஓசோன் வாயுக்கள் அழிக்கப்படும் நிலை உருவானால், பனிக்கட்டிகள் உருகி கடல்மட்டம் உயர்ந்து, நில பரப்பு அழிந்து, அதிக வெப்பம் காரணமாக வறட்சி ஆரம்பிக்கும். மனிதர்களையும், விலங்குகளையும் புற ஊதாக் கதிர்கள் எளிதில் நேரடியாகத் தாக்கும். இதனால் தோல் புற்றுநோய், கண்ணில் சதை வளர்தல், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடலுக்கு பல்வேறு விதமான நோய்களை உண்டாக்கும். தாவரங்களின் உற்பத்தி திறன் அழியும். கோடிக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களும் இதனால் இறக்கும்.

பாதுகாக்கும் வழிகள்: