World Photography Day 2024: உலக புகைப்பட தினம்.. வரலாறு என்ன தெரியுமா?!
உலக புகைப்பட தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 அன்று உலகளவில் கொண்டாடப்படுகிறது.
ஆகஸ்ட் 19, மும்பை (Mumbai): ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19-ம் தேதி உலகப் புகைப்பட நாள் கொண்டாடப்படுகிறது. புகைப்படக் கலை என்பது வெறும் படம் பிடிப்பதல்ல; அது ஒரு கலை, ஒரு கதை, ஒரு உணர்வு.
புகைப்படத்தின் வரலாறு: புகைப்படக் கலைக்கு நீண்ட வரலாறு உண்டு. டாகுரியோடைப் முதல் டிஜிட்டல் கேமரா வரை புகைப்படம் பல மாற்றங்களை கண்டுள்ளது. ஆனால், அதன் அடிப்படை நோக்கம் ஒன்றுதான் - உலகைப் பதிவு செய்வது. கடந்த 13ம் நூற்றாண்டில் கேமரா அப்ஸ்குரா என்ற கருவி மூலம் புகைப்படக்கலை, தனது பயணத்தை தொடங்கியது. முதன்முதலில் 1837 இல் இந்த தினம் கொண்டாடப்பட்டது. Raksha Bandhan: சகோதர பாசத்தை உறுதியாக்கும் ரக்சா பந்தன் நாள் இன்று; உங்களுக்கும் வாழ்த்துக்கள்.!
லுாயிசு டாகுவேரே என்பவர், ஜோசப் நைஸ்போர் நீப்ஸுடன் இணைந்து டாகுரியோடைப் எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். இதையடுத்து, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு,1839 ஆம் ஆண்டு சர் ஜான் ஹெர்செல் என்பவர் கண்ணாடியை பயன்படுத்தி நெகட்டிவ்களை எடுக்கும் முறையை கண்டுபிடித்தார். அவர்தான், இக்கலைக்கு 'போட்டோகிராபி' என்று பெயர் வைத்தார்.
புகைப்படத்தின் சக்தி: ஒரு படம் ஒரு போரை நிறுத்தும் சக்தி கொண்டது. அது ஒரு சமூகத்தை மாற்றும். ஒரு தனிநபரை ஊக்குவிக்கும். புகைப்படம் என்பது வெறும் படம் அல்ல; அது ஒரு கருவி, ஒரு ஆயுதம், ஒரு கலை வடிவம். புகைப்படம் என்பது வாழ்க்கையின் பிரதிபலிப்பு. அது நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது. அது நம் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. அது நம் நினைவுகளைப் பாதுகாக்கிறது.