World Tourism Day 2024: "உலகை பவனி வருவோம்.. பயணங்கள் மறப்பதில்லை…" உலக சுற்றுலா தினம்..!
சுற்றுலாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 27ஆம் தேதி உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது.
செப்டம்பர் 27, புதுடெல்லி (Special Day): உலக சுற்றுலா தினம் (World Tourism Day) ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 27-ம் தேதி கொண்டாடப்படுகிறது. கலாச்சார மரபுகளையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் சுற்றுலாவை பரந்த நோக்கில் அணுகுவதே உலக சுற்றுலா தினத்தின் நோக்கம். இந்த ஆண்டு கருப்பொருளில், ‘சுற்றுலாவும், அமைதியும்’ என்ற கருத்து முன்னிறுத்தப்படுகிறது. இந்த தினம் 1980-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினம் 1970-ம் ஆண்டு ஐநாவின் சுற்றுலா சட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
வரலாறு: 1814ல் தாமஸ் குக் இங்கிலாந்தின் லாபரோ என்ற நகரில் இருந்து லீசெஸ்டர் வரை 570 நபர்களுடன் ரயில் பயணம் சென்றார். இதுவே உலகின் முதல் விளம்பரப்படுத்தப்பட்ட தொழில்முறை சுற்றுலா. இப்பயணம் வெற்றிகரமாக இருந்ததால் பல சுற்றுலா பயணங்களை தாமஸ்குக் ஏற்பாடு செய்தார். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பயணிகளை இன்ப சுற்றுலாவிற்கு அழைத்து சென்றதால் தாமஸ் குக் ‘சுற்றுலாவின் தந்தை’ என்றும் ‘உலகின் முதல் பயண முகவர்’ என்றும் கருதப்படுகிறார். Neelakurinji Flowers: பூத்துக்குலுங்கும் நீலக்குறிஞ்சி மலர்கள்; கண்ணை கவரவைக்கும் காணொளி உள்ளே.!
சுற்றுலா செல்பவர்களுக்காக சில டிப்ஸ்:
- சுற்றுலா திட்டமிடுவதற்கு முன், யாருடன் செல்கிறீர்களோ அவர்களுக்கு விடுப்பு எடுக்க முடியுமா என தேதி குறித்து ஆலோசனை செய்வது முக்கியம்.
- பயணம் செல்லும் இடத்தை முடிவெடுத்து டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
- தங்குமிடம், அது தொடர்பான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
- சுற்றுலா செல்லும் இடங்களில் என்னென்ன உள்ளூர் உணவுகளை ருசிக்கலாம் என்பது குறித்தும் திட்டமிடுவது நல்லது.
- கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் பயன்படுத்தினால் ரிவார்ட் கிடைக்கும். அதோடு, சுற்றுலா செல்லும்போது பணம் கையில் வைத்திருப்பது நல்லது.
- தேவையான உடைகளை மட்டும் எடுத்துச்செல்லவும். அதிகமானால் லக்கேஜ் எடை அதிகமாக இருக்கும்.
- உங்களுடைய பெயர், முகவரி, உங்களை தொடர்புகொள்ள வேண்டிய எண் உள்ளிட்டவற்றை ஒரு நோட்புக்கில் குறித்து சுற்றுலா செல்லும்போது வைத்துகொள்ளலாம்.