World Tsunami Awareness Day 2024: உலக சுனாமி விழிப்புணர்வு தினம்.. வரலாறு என்ன தெரியுமா?!
ஆண்டுதோறும் நவம்பர் 5ஆம் தேதி உலக சுனாமி விழிப்புணர்வு நாள் கடைபிடிக்கப்படுகிறது.
நவம்பர் 05, சென்னை (Special Day): ‘சுனாமி’ என்ற வார்த்தையை கேட்கும் போதே மனதில் தானாகவே பதற்றம் தொற்றி கொள்கிறது. இந்த வார்த்தை ஜப்பானிய சொல் ஆகும். தமிழில் ஆழிப்பேரலை என்று குறிப்பிடப்படுகிறது. அரிதான நிகழ்வாக பார்க்கப்படும் சுனாமி, மிகவும் ஆபத்தான அதிக அழிவை ஏற்படுத்த கூடிய பேரழிவு. இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் 5 ஆம் தேதி உலக சுனாமி விழிப்புணர்வு தினமாகக் (World Tsunami Awareness Day) கொண்டாடப்படுகிறது.
வரலாறு: ஐக்கிய நாடுகளின் அறிக்கையின்படி, டிசம்பர் 2004ல் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமியின் கொடிய பேரழிவு கடந்த 100 ஆண்டுகளில் நிகழ்ந்த மற்ற இயற்கை ஆபத்தை விட மிகவும் அதிகம். அந்த பேரழிவில் மில்லியன் கணக்கான இறப்புகள் நிகழ்ந்தன, மேலும் 14 நாடுகள் சுனாமியால் பாதிக்கப்பட்டன. அதில் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு தாய்லாந்து ஆகும். இலங்கை, இந்தோனேசியா மற்றும் இந்தியாவில் மட்டும் 2,27,000 பேர் இறந்ததாக ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. இதுகுறித்த விழிப்புணர்வை பரப்பும் முயற்சியாக, டிசம்பர் 2015 இல் ஐநா பொதுச் சபை (UN) நவம்பர் 5ம் தேதியை உலக சுனாமி விழிப்புணர்வு தினமாக அறிவித்தது. Astrology: சனியின் கெடுபலன் தோஷம் குறைய, எந்தெந்த வழிபாட்டை, எப்படி எப்படி செய்ய வேண்டும்?!
சுனாமி தாக்குதலிலிருந்து தப்பிப்பது எப்படி?:
- சுனாமி ஏற்படும் முன்னதாக கடலுக்குள்ளிருந்து ஒருவித பயங்கரமான ஒலி கேட்கும். இதை நீங்கள் உணர்ந்தால் சற்றும் தாமதிக்க வேண்டாம். அங்கிருந்து பாதுகாப்பான பகுதிக்கு உடனடியாக நகர்ந்துவிடுங்கள்.
- உயர்வான பகுதிக்குச் சென்றுவிடுங்கள். வானுயர்ந்த கட்டடங்கள், பெரிய கனரக இயந்திரங்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள் உங்களை சுனாமி தாக்குதலிலிருந்து முழுவதுமாகக் காப்பாற்றாது. ஆனால் தாக்குதலின் வீரியத்தைக் குறைக்கலாம், தற்காலிக பாதுகாப்பு அளிக்கலாம்.
- நடுக்கடலில் இருக்கும் கப்பல்களுக்கு சுனாமியால் பாதிப்பு இல்லை. சுனாமி நிலத்தில் மட்டும்தான் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதன் காரணமாகவே சுனாமி வருவது முன்கூட்டியே தெரிந்தால், துறைமுகத்தில் இருக்கும் கப்பல்களை நடுக்கடலுக்குள் கொண்டு சென்றுவிடுகிறார்கள்.