IPL Auction 2025 Live

Microplastics Found in Sugar And Salt: இந்தியாவில் விற்கும் உப்பு, சர்க்கரையில் மைக்ரோ பிளாஸ்டிக்.. வெளியான பகீர் ஆய்வு..!

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் சர்க்கரை, உப்பில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

Microplastics (Photo Credit: Wikipedia)

ஆகஸ்ட் 14, புதுடெல்லி (New Delhi): டெல்லியை தலைமையிட மாகக் கொண்டு டாக்சிஸ் லிங்க் என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு சார்பில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் சர்க்கரை, உப்பு (Sugar And Salt) மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. அந்த ஆய்வில் வெளியான தகவலில், இந்தியாவில் உள்ள அனைத்து பிராண்டட் உப்பு மற்றும் சர்க்கரையில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் (Microplastics) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து டாக்ஸிக் லிங்க் அமைப்பின் இயக்குனர் ரவி அகர்வால், "மைக்ரோ பிளாஸ்டிக் உப்பு மற்றும் சர்க்கரையில் 0.1 மிமி முதல் 5 மிமி அளவில் காணப்படுகிறது. இந்த பிளாஸ்டிக் நுண் துகள்களால் நுரையீரல் பாதிப்பு, மாரடைப்பு, உடல் பருமன் அதிகரித்தல் உள்ளிட்ட பல பிரச்சினைகளை நாம் எதிர்கொள்ளக் கூடும்" என கூறியுள்ளார்.

மைக்ரோ பிளாஸ்டிக்: மைக்ரோபிளாஸ்டிக்ஸ் என்பது 0.2 இன்ச் (5 மிமீ) விட்டம் கொண்ட சிறிய பிளாஸ்டிக் துண்டுகளாகும். அதாவது ஒரு அரிசி அளவு இருப்பவை மைக்ரோ பிளாஸ்டிக்குகள். பயன்படுத்திய பிறகு பிளாஸ்டிக்குகளை குப்பையில் போடுகிறோம். அது நிலத்தில் புதைந்து விடுகிறது. அல்லது நீர்நிலைகள் மூலம் கடலில் கலந்து விடுகிறது. இந்த பிளாஸ்டிக் பொருட்களில் உள்ள நுண்துகள்களான மைக்ரோ பிளாஸ்டிக் (Micro Plastic) நிலம், நீர், காற்று என அனைத்திலும் கலந்துள்ளது. Medicinal Benefits Of Marudhani: மருதாணியில் உள்ள மகத்தான மருத்துவ பயன்கள் என்னென்ன..? விவரம் உள்ளே..!

ஆபத்துகள்: இந்த மைக்ரோ பிளாஸ்டிக் மனித உயிரணுக்களில் சேதங்களை ஏற்படுத்துவதாகவும், இதனால் மலட்டுத்தன்மை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பிளாஸ்டிக்கில் இருக்கும் விஷத் தன்மையுள்ள வேதிப்பொருள்களால் இதய நோய்கள், சிறுநீரகக் கோளாறுகள், இனப்பெருக்க உறுப்புகளில் பாதிப்பு (Reproductive Problems), ஹார்மோன் குறைபாடு (Endocrine Disruptors), புற்றுநோய் போன்றவை ஏற்படும்.