Carrot Payasam Recipe: கேரட் பாயசம்.. சுவையாக செய்வது எப்படி?.!

கேரட் பாயாசம் ரெசிபி எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

Carrot Payasam (Photo Credit: YouTube)

மார்ச் 6, சென்னை (Chennai): கேரட் பொறியல், கேரட் ஜூஸ், கேரட் சாதம் என பல வகைகளில் கேரட்டை பயன்படுத்தும் நிலையில், தற்போது கேரட் உபயோகித்து தித்திக்கும் பாயசம் செய்முறை குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கேரட் - 5

நெய் - தேவையான அளவு

முந்திரி - 15

உலர் திராட்சை - 20

தேங்காய் - சிறிதளவு

வெல்லம் - தேவையான அளவு

பால் - 1 கப்

ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை Jyothika Returns To Bollywood: தீவிர உடற்பயிற்சியில் ஜோதிகா.. அட 25 ஆண்டுகளுக்குப் பிறகு பாலிவுட்டில் என்ட்ரினா சும்மாவா..!

செய்முறை: கேரட்டுகளை துருவி, நெய்யில் வதக்கி, ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும். பின்னர் முந்திரி உலர் திராட்சை, நறுக்கிய தேங்காய் ஓரு கை ஆகியவற்றை நெய்யில் வறுத்து கொள்ளவும். அதனுடன் ஒரு டம்லர் தண்ணீர் மற்றும் வெல்லம் சேர்த்து கொதிக்க வைக்கவும். தேவைபட்டால் தண்ணீர் மீண்டும் ஒரு டம்ளர் சேர்க்கவும். நன்கு கொதித்தவுடன் கேரட் அரைத்த கலவையை இதனுடன் சேர்க்கவும்.

சிறிது நேரம் பின்பு, அதனுடன் 1 கப் பால் சேர்கவும். பால் கொதித்தவுடன் அதனுடன் ஏலக்காய் தூள் சேர்க்கவும். இப்போது 5 ஸ்பூன் நெய் சேர்த்து கிளரவும். அவ்வளவு தான் சுவையான கேரட் பாயாசம் ரெடி.